விஜய நகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச
உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த
பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார்.
ஒருநாள் அரசர் அவரிடம்,
"அரசே நான்
கேள்விப்பட்டேனே...? தங்கள் அவைப்
புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே! அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள்
நிறத்திலும், நடுப்பகலில்
சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு
வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச்
சொல்லுங்களேன்...'' என்றார்.
மேலும், "அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில்
பறக்கவும் வேண்டும்'' என்றார்.
அரசர் உடனே தெனாலியை அழைத்து,
"விரைவில்
அத்தகைய குருவியைக் கொண்டு வா...'' என்று உத்தரவிட்டார்.
அதைக் கேட்டுத் தெனாலிராமனுக்குத் தலை
சுற்றியது. அத்தகைய பறவை பற்றி அவர் ஒரு போதும் கேள்விப்பட்டது கூட இல்லை.
ஆனால் சிரித்தவாறே,
"சரி.... அரசே!
நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன்'' என்றார்.
மறுநாள் தெனாலி, சபைக்குத் தாமதமாக வந்தார். அவர்
நிலைமை மிக மோசமாக இருந்தது. கிழிந்த உடைகள். அதில் புற்களும், முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. கையில்
குருவி எதுவும் இல்லாத ஒரு பறவைக் கூண்டு.
அவர் அரசரிடம், "என்ன சொல்வேன் அரசே! அதிசயமான கதை
நடந்து விட்டது. அந்தக் குருவி கையில் கிடைத்து விட்டது. நானும் அதைக் கூண்டில்
அடைத்து விட்டேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அது தனது மாயமான ஏழு இறக்கைகளை
விரித்துப் பறந்து சென்று விட்டது. காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதூரம்
சென்று விட்டேன். அது மீண்டும் என் கையில் சிக்கவில்லை'' என்றார்.
தொடர்ந்து, சற்று தூரத்தில் பறந்து சென்றவாறே
அது என்னிடம் சொல்லிற்று, "அரசரிடம்
போய்ச் சொல்... காலையாகிற போதோ அல்லது இரவாகிறபோதோ அல்லது நடுப்பகல் ஆகிறபோதோ, வெளிச்சமோ இருட்டோ இல்லாத போது, நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து, திரும்ப வந்து விடுகிறேன்... என்றது'' என்றார்.
அதைக் கேட்டதும் அரசருக்கு மட்டுமல்ல, அண்டை நாட்டு மன்னர்
விஜயவர்தனருக்கும் தலை சுற்றியது.
அப்படிப்பட்ட சமயம் எங்கு உண்டாகும்?
"காலை ஆகாமல், நடுப்பகல் ஆகாமல், இரவு ஆகாமல் வெளிச்சம், இருட்டு ஆகும் சமயம் எது?'' என்று அனைவரும் வியப்படைந்தனர்.
அதைக் கேட்டு விஜயவர்தனர், அரசர் இருவரும் சிரித்து விட்டனர்.
விஜயவர்தனர் சொன்னார், "தெனாலியின் சாதுரியம் பற்றி இதற்கு
முன்பு கேள்விப்பட்டுள்ளேனே தவிர, இப்போது தான் நேரில் பார்த்தேன்...'' என்று புகழ்ந்தார்.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON