இவர் தமிழ்நாட்டின் தென்பகுதியில்
நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் மார்ச் 14,
1918 ஆண்டு\ பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம்
அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு
வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம்
கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக
சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.
பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம்
முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின்
இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று
கச்சேரி செய்து வந்தார்.
1942 இல் மனோன்மணி என்ற
திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த மகாதேவன் பின்னர் பக்த கௌரி, அக்கினி புராண மகிமை, பக்த ஹனுமான், நல்ல காலம், மதன மோகினி ஆகிய படங்களுக்கு இசை
அமைத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக்
கொண்டார். மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும்
பாடினார்.
திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், கந்தன்
கருணை, தாய் சொல்லைத் தட்டாதே, படிக்காத
மேதை, வசந்த மாளிகை எனப் பல புகழ் பெற்றத் திரைப்படங்களுக்கு
இசையமைத்துள்ளார்.
கே.வி.மகாதேவன் நினைவு சிறப்பு அஞ்சல் உறை
விருதுகள்
1) சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய
விருது
(1967, கந்தன் கருணை) (இவ்விருதின் முதல் பெறுநர்)
2) சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு
அரசு விருது
(1969, அடிமைப் பெண்)
3) சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய
விருது
(1980, சங்கராபரணம்)
4) சிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர்
விருது (தெலுங்கு)
(1992, சுவாதி கிரணம்)
மறைவு
கே. வி. மகாதேவன் 2001 சூன் 21 இல் தனது 83வது அகவையில் சென்னையில் காலமானார்
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON