முதுகில் வரும் பருக்களை போக்க சில வழிகள்!!!
homemade masks cure back acne
பருக்கள் முகத்தில் மட்டும் தான் வரும் என்பதில்லை. உடலில் எங்கு வேண்டுமானாலும் வரும். ஆனால் பெரும்பாலும் முகம் மற்றும் முதுகைத் தான் அதிக அளவில் தாக்கும். இப்படி பருக்கள் முதுகில் இருந்தால், இன்றைய காலத்தில் பெண்களால் எந்த ஒரு உடையையும் அணிய முடியாது. ஏனெனில் தற்போது ஃபேஷன் என்ற பெயரில் முதுகை அப்படியே வெளிக்காட்டும் படியான உடைகள் தான் அதிகம் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
அது புடவையானாலும் சரி, மற்ற ஆடைகளானாலும் சரி முதுகானது விளையாட்டு மைதானம் போல நன்கு வெட்ட வெளியாக காணப்படுகிறது. அப்படி இருக்க, முதுகில் பருக்கள் இருந்தால், எப்படி அந்த உடைகளையெல்லாம் அணிவது? ஆகவே அந்த பருக்களைப் போக்க ஒருசில எளிய வழிகளைக் கொடுத்துள்ளோம். அவற்றைப் பின்பற்றினால், பருக்களை போக்குவதுடன், பருக்களால் ஏற்படும் கருமையான தழும்புகளையும் போக்கலாம். சரி, இப்போது அந்த வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க்
ஓட்ஸ்
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கவல்லது. இப்படி சருமத்தில்
எண்ணெய் பசையானது அதிகம் இல்லாமல் இருந்தாலே பருக்களைத் தடுக்கலாம். எனவே ஓட்ஸை
நன்கு வேக வைத்து, குளிர வைத்து, அத்துடன் தேன்
சேர்த்து கலந்து, முதுகில் தடவி 20 நிமிடம் ஊற
வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர பருக்கள்
வருவதைத் தடுக்கலாம்.
தக்காளி மாஸ்க்
தக்காளியில் வைட்டமின்
ஏ மற்றும் சி அதிகம் இருப்பதால், அவற்றை
முதுகிற்கு பயன்படுத்தினால் பருக்களைப் போக்கலாம். அதற்கு தக்காளியை அரைத்து, முதுகில் தடவி 30 நிமிடம் ஊற
வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மஞ்சள் மற்றும் புதினா மாஸ்க்
புதினா
மற்றும் மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை இருப்பதால், அவை பருக்கள் பரவுவதை தடுப்பதுடன், அரிப்புக்கள் ஏற்படுவதையும் தடுக்கும். எனவே மஞ்சள் தூளை புதினா
சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முதுகில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான
நீரில் கழுவுங்கள்.
ரோஜா மற்றும் எலுமிச்சை மாஸ்க்
எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டரை சரிசமமாக கலந்து, இரவு படுக்கும் போது, காட்டன்
பயன்படுத்தி முதுகில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள்
காலையில் கழுவ வேண்டும்.
பட்டை மற்றும் தேன் மாஸ்க்
இந்த
கலவையைக் கொண்டு மாஸ்க் போட்டால், பருக்களை
உண்டாக்கும் அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் நீங்கிவிடும். ஆகவே 2 டேபிள் ஸ்பூன் தேனுடன், 1 டீஸ்பூன்
பட்டைத் தூள் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது
எலுமிச்சை சாற்றினையும் கலந்து, முதுகில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள்.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON