Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய் / Eustachius Benedictus de Lannoy
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
  மன்னர் முன்பு தளபதி இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய் சரணடைவது குறித்த ஓவியம் இயுஸ்ட்டாச்சியஸ் பெனடிக்ட்டஸ் டி லனோய் ( Eustachius Benedic...
  மன்னர் முன்பு தளபதி இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய் சரணடைவது குறித்த ஓவியம்

இயுஸ்ட்டாச்சியஸ் பெனடிக்ட்டஸ் டி லனோய் (Eustachius Benedictus de Lannoy, 1715ஜூன் 1, 1777) பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு ஃபிளெமியர் (Flemish) ஆவார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிக நிலையொன்றை இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள குளச்சலில் நிறுவுவதற்காக அக்கம்பனியின் கடற்படைத் தளபதியாக அனுப்பப்பட்டார். ஆனால், இம் முயற்சியின்போது 1741 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர்ப் படைகளுடன் ஏற்பட்ட போரில் தோல்வியடைந்து போர்க்கைதி ஆனார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போர் குளச்சல் போர் என்று அழைக்கப்படுகிறது. டி லனோய் சிறைக் கைதியாக இருந்த போது அரண்மனைப் பணியில் இருந்த நீலகண்ட பிள்ளை என்பவரின் நண்பரானார். பின்னர் நீலகண்ட பிள்ளை கத்தோலிக்கராக மதம் மாறினார். இந்த நீலகண்ட பிள்ளையே கோட்டார் மறைமாவட்டத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆவார்.


இதுதான் தளபதி டி லனாய்கல்லறை. சர்ச் வடிவில் இருக்கும் தோற்றத்தில் வெளியே        தமிழ் மற்றும் இலத்தீன் வாசகங்களுடன் கல்வெட்டு குறிப்புக்கள் காணப்படுது 
                       Tomb of Eustachius Benedictus de Lannoy
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டச்சு வீரர்களை விடுதலை செய்ய மார்த்தாண்ட வர்மா ஒப்புக்கொண்டார். ஆனால் டிலனாய் மார்த்தாண்ட வர்மாவின் படையில் சேர விருப்பம் தெரிவித்தார். அப்போது அவருக்கு வயது 26.  அபோது தான் அவர்  உதயகிரிக்கோட்டையை கட்டினார்  கி.பி. 1600ஆண்டு இந்த கோட்டைகட்டப்பட்டதாகவும், பின்னர் பேரரசர் ராஜராஜ சோழன்படையெடுப்பால் பாதிக்கோட்டை அழிந்து‌போனதாகவும், வரலாறு‌கள் கூறு‌கின்றன.

வேநாடு மன்னர் மார்த்தாண்டவர்மா 1729 ம் ஆண்டுஇந்தக் கோட்டையை புது‌ப்பித்து‌க் கட்டியுள்ளார்.   90ஏக்கர் பரப்பளவில் அமைந்து‌ள்ள இந்த கோட்டையைமுன்னின்று‌ கட்டியவர் டி லனோய் என்ற கடற்படைதளபதி ஆவார். இந்தக் கோட்டைக்குள் 200 அடி உயரமலைக்குன்று‌ ஒன்று‌ அமைந்து‌ள்ளது‌. முழுவது‌ம் கருங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டைதில்லாணைக் கோட்டை என்று‌ம் அழைக்கப்படுகிறது‌.இந்தக் கோட்டைக்குள் து‌ப்பாக்கி வார்ப்படம் செய்யும்உலை ஒன்று‌ உள்ளது‌. மன்னர் காலத்தில் இங்குது‌ப்பாக்கிகள் செய்யப்பட்டதாக தெரிகிறது‌. இந்தக்கோட்டையை பல ஆண்டுகள் முன்னின்று‌ கட்டியதளபதி டி லனோய். தனது‌ வாழ்நாளின் பெரும்பகுதியைஇந்தக் கோட்டையில் தான் கழித்து‌ள்ளார்.

வாளும், ஈட்டியும் தான் போர் என்று நினைத்தவர்களுக்கு டிரில் பயிற்சி அளித்ததோடு துப்பாக்கி, பீரங்கி இயக்கவும் கற்றுக்கொடுத்தார். தொடர்ந்து மார்த்தாண்ட வர்மா அவரை படைத்தளபதியாக்கினார். தொடர்ந்து 35 வருடங்கள் மார்த்தாண்ட வர்மா படையில் பணியாற்றிய டிலனாய் 1777 ல் காலமானார்.


      இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனாய் கல்லறை. Tomb of Eustachius Benedictus de Lannoy
அவருடைய உடல் உதயகிரிக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. அருகில் அவருடைய மனைவி, மகனுடைய உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மூன்று கல்லறைகளும் தேவாலய வடிவில் எழுப்பப்பட்டுள்ளது. கோட்டையினைச் சுற்றிவரும்போது‌, ஒரு அமைதியானசூழல் இருப்பதை காணலாம். விசித்தரமான தனிமைஉணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது‌.கோட்டையினு‌ள் பெரிய அரண்மனையோ, கோவிலோஇல்லை.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அளப்பரிய பணிகளைமன்னர் மார்த்தாண்டவர்மாவும், தளபதி டி லனோயும்திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளனர். இந்த கோட்டைஉருவான பின்னரே சுற்றியுள்ள ஊர்களில் அமைதிஉருவானது‌. மன்னரால் பொன்மனை அணையும்,கால்வாயும் உருவாக்கப்பட்டதால்விளை நிலங்கள்செழித்து‌ கன்னியாகுமரியை வளமாக்கின.

இந்தக் கோட்டை ஒரு காலத்தில், கைதிகளை காவலில்வைத்திருக்கும், களமாகவும் விளங்கியுள்ளது‌.திப்புசுல்தானு‌க்கு எதிராக கிழக்கிந்திய கம்பெனிபோரிட்டபோது‌ பிடிபட்ட கைதிகளை கிழக்கிந்தியகம்பெனி இங்கு பாது‌காப்பாக வைத்திருந்ததாககூறப்படுகிறது‌.   அண்மையில் தொல்பொருள் ஆய்வுத் து‌றையினர்கோட்டையின் அருகே ஒரு சுரங்கப்பாதையினைகண்டுபிடித்து‌ள்ளனர். அந்தப் பாதை கோட்டையிலிருந்து‌பத்மநாபபுரம்  அரண்மனைக்கு ரகசியமாக செல்லு‌ம்வகையில் அமைந்து‌ள்ளது‌.  


மனைவி மர்கெரெட்டாடி லனாய் மற்றும் அவருடைய மகன் ஜான் டிலனாய் கல்லறை
                                De Lannoy Tomb
உதயகிரி முற்காலத்தில் ராணுவ கேந்திரமாகவே இருந்திருக்கிறது. நிரந்தர ராணுவத்தை திருவிதாங்கூர் உருவாக்கிக் கொண்டபோது அதை தங்கவைப்பதற்கான முகாமாக இது விரிவாக்கம் செய்யப்பட்டது. இப்பகுதி கோட்டையாக தெரிவுசெய்யப்படக் காரணமே இதற்குள் உள்ள பெரிய குன்றுதான். இதற்குள் பெரிய கோயிலோ அரண்மனையோ இல்லை. டிலனாய் மர்மங்களால் சூழப்பட்ட சரித்திர புருஷர். மன்னரின் விசுவாசமான நண்பராக இருந்தவர். படைகளுக்கு நெருக்கமானவர். ஆனால் அவருக்கும் தளவாய் ராமய்யனுக்கும் இடையே பனிப்போர் இருந்தது. டிலனாய் இறந்ததுமே அவரது இடம் வரலாற்றில் குறுக்கப்பட்டது.

பழைய ஒரு மாதாகோவில் போன்ற அமைப்பு இடிந்து கூரையில்லாமல் குட்டிச்சுவராக நிற்கிறது. அதற்குள்தான் டிலனாய் அவரது தம்பி ஆகியோரின் சமாதிகள் உள்ளன. பிற்பாடு அது ஒரு முக்கியமான சமாதியிடமாக ஆகி திருவிதாங்கூரில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ரெசிடெண்ட் ஆட்சியைச்சேர்ந்த சில அதிகாரிகளின் சமாதிகளும் அங்கே உள்ளன. அவர்கள் யார் என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை.
அனாதைமாதிரி கிடக்கிறார் இந்த மண்ணுக்கு டிலனாயின் கொடை வேறு எவரது கொடையைவிடவும் சிறியது அல்ல. இங்கே வலுவான மைய ஆட்சியை, சட்டம் ஒழுங்கை அவர் நிலைநாட்டவில்லை என்றால் இந்தியாவின் வளம்மிக்க மாவட்டங்களில் ஒன்றாக கன்யாகுமரி ஆகியிருக்காது. கோட்டைகள்சூழ அமைதி உருவான பிறகுதான் பொன்மனை அணையும் கால்வாயும் உருவாக்கப்பட்டன. நாஞ்சில்நாட்டு விளைநிலங்கள் உருவாயின. ஆனால் வரலாறு அப்படியே அவரை மறந்துவிட்டது. ஒரு சாலைக்காவது நாம் அவரது பேரைபோடவேண்டும்


கோட்டை தற்போது‌ தமிழக வனத்து‌றையின்கட்டுப்பாட்டில் உள்ளது‌ கண்டுகொள்ளப்படாமல் இருந்த உதயகிரிக்கோட்டை இப்போது புதுப்பிக்கப்பட்டு மான்பூங்கா, மயில்பூங்கா, விருந்தினர் விடுதி என புதுப்பொலிவு பெற்று சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் பேருந்தில் ஏறி புலியூர்க்குறிச்சியில் இறங்கிக்கொள்ளலாம். அங்கிருந்து 30 அடி தொலைவில் அமைந்துள்ளது இந்த உதயகிரிக்கோட்டை.




About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top