Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: யோக முத்திரைகள்..! - சித்தம்,
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம் , ந...
பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது. (1)இந்த ஐந்து வகை மூலங்களும் ஒன்றுக்கொன்று பூரண தொடர்புடையதாக காணப்படுகிறது. மரம், நெருப்பு, நிலம், உலோகம், நீர், மரம் என்னும் ஒன்றுகொன்று தூண்டும் விதத்திலும் மற்றும் நிறுத்தும் விதத்திலும் காணப்படுகிறது. இவை எல்லாம் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது, யோகாசனம், தியானம் செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி அவற்றின் சமநிலையைப் பேணுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீர்படும். இவை சிலவகை முத்திரைகள் மூலம் பெறப்படுகிறது. ஒழுங்கான முத்திரை உபயோகமும் தியானமும் எம் வாழ்வில் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் நெருப்பையும்
சுட்டுவிரல் காற்றையும்
நடுவிரல் ஆகாயத்தையும்
 
மோதிர விரல் நிலத்தையும்
 
சுண்டு விரல் நீரையும்
 
குறிக்கின்றன.

பழைய காலங்களில் முனிவர் நாட்கணக்கில் கடும் தவம் புரிந்தனர் என்றெல்லாம் கேள்விப்படுகின்றோம் அவர்களுக்கு எந்தவிதமான நோயும் அணுகாமல் இருப்பதற்குரிய காரணிகளுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம். முத்திரை இந்து சமயத்திலும் பௌத்தமதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. முத்திரைகளைப் பற்றிய படிப்பு தத்வ யோகம் ( Tatva Yoga ) என அழைக்கப்படும்.

இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.





About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top