அனந்த விக்டோரியா மார்த்தாண்டவர்மன்
கால்வாய் என்பதைச் சுருக்கமாக ஏ.வி.எம். கால்வாய் (A.V.M
Canal) என்று கூறுகின்றனர். இந்த கால்வாயின் முக்கிய நோக்கம்,
திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும், நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக
இணைப்பது ஆகும்.
இது உத்தரம் திருநாள் மார்த்தாண்ட
வர்மர் (1846-1860) என்பவரால் தொடங்கப்பட்டது. மன்னர் 1860 ல் இறக்கவே, அவரது வாரிசு மன்னரான ஆயிலியம்
திருநாள் ராமவர்மன் (1860-1880) இப்பணியைத் தொடர்ந்தார்.
இதன் முதல் கட்டமாக பூவாறில் இருந்து தேங்காய்ப்பட்டணம், தாமிரபரணி
நீர்தேக்கம் வரை சுமார் 10 கல் தூரம் வெட்டப்பட்டு 1864 பெப்ரவரி மாதம் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து
கால்வாய் குளச்சல் அருகில் உள்ள மண்டைக்காடு பொன்னம்மை நாடாத்தி கோயில் வளாகம் வரை
வெட்டப்பட்டது.
1867 ல் இத் திட்டம் பல
காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று திவானாக இருந்த சர். மாதவராவ்
கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
It is to be regretted that the necessity arose
for suspending the extension of the southern canal towards the capital after
clearing the line and making some progress in blasting and excavation. the
Wurkullay (வர்கலை) junction canal was certainly entitled
to prior attention, but it would have been more satisfactory it provision could
have been made for simultaneously carrying on both the works. But it seems that
it could not been made at the time. It is to be hoped however, that the Chief
Engineer will be in a positon to resume erelong the work suspended.
வர்கலை காலவாய் பணி தொடங்கிவிட்டதால்
எ.வி.எம். காலவாய் பணியை அரசு நிறுத்திவிட்டது. கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம்
வரையிலும், அங்கிருந்து கொல்லம் வரையிலும்,
அங்கிருந்து கொச்சி வரையிலும் நீர்வழிப் போக்குவரத்திற்காக
தொடங்கப்பட்ட இக் கால்வாய் பணப் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்டது. இரண்டாவது ஐந்து
ஆண்டுத் திட்டத்திலும் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த கால்வாயை தேங்காய்பட்டணத்தில்
இருந்து மீண்டும் அகலமாக வெட்டி மணக்குடி வரை நீட்ட வேண்டும்.
கன்னியாகுமரியில் இருந்து
திருவனந்தபுரம் வரையில் நீர்வழி பாதை அமைத்து சுற்றுலாவை வளர்க்க படகு சவாரி விட
வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மற்றும் அரசியல் வாதிகள் போராடி வருகின்றனர்.
மேற்கூறிய கோரிக்கைகள் ஒருபுறம்
இருக்க மற்றுமொரு சாரார் தங்களின் முறைப்படி பட்டா நிலமாக்கப் பட்ட நிலம் மற்றும்
வீடு ஆகியவைகள் பாதிக்கப் படும் பட்சத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வதுடன் தங்களுக்கு மாற்று நிலம், வீடு மற்றும் நஷ்ட ஈடு தர அரசு தரப்பில் கோரிக்கையும்
விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து
திருவனந்தபுரம் வரையில் நீர்வழி போக்குவரத்து அதிகரித்து மாவட்டத்தில் சாலைப்
போக்குவரத்து நெரிசல் பெருவாரியாக குறையும். அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்து கடல்
நீர் உட்புகுவது குறையும்
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON