சொத்தவிளை
கடற்கரை தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள்
ஒன்றாகும். நாகர்கோவிலுக்கு மிக அருகில் இக்கடற்கரை அமைந்துள்ளது. இது சுற்றுலா
பயணிகளை அதிகம் கவர்ந்து வருகின்றது.
அழகிய நீண்ட மணல் பரப்புடன் காட்சியளிக்கும் இக்கடற்கரையில்
சிறு, சிறு குடில்கள்
மூலம் தமிழக சுற்றுலாத்துறை அழகுப்படுத்தியுள்ளது. காட்சிக்கோபுரம், அழகிய புல்
வெளிகள், சிறுவர்
பூங்காக்கள் இக்கடற்கரையின் அருகில் அமைந்துள்ளன.
ஆழமற்ற தண்ணீரும் உயரமான மணற்குன்றுகளும் எங்கே
பார்க்கமுடியும்? இளைப்பாற குடை
போன்ற கூரைகள் தனி குடில்கள் உண்டு. எங்கே?
கன்னியாகுமரியிலிருந்து
10 கி.மீ.தொலைவில்
சொத்தவிளை கடற்கரைக்குச் செல்ல வேண்டும். இந்த மாவட்டத்தின் சிறந்த இயற்கைக்
கடற்கரைகளில் இதுவும் ஒன்று. இப்பகுதி முழுவதையும் மேலிருந்து அழகாகக் காணும்
வகையிலான காட்சிக் கோபுரம் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது. புதிய கடற்கரை சாலை வழியாக இங்கு நேராக வாகனத்தில் வரலாம்.
கடற்காற்றின் சுகத்தை அனுபவிக்கலாம்.
இது சங்குத்துறை
கடற்கரை அருகே அமைந்துள்ள மற்றொரு கடலோர சுற்றுலாத்தலம் ஆகும் மாலை வேளைகளில் இயற்கையின் அழகை ரசிப்பதற்கு ஏற்ற இடம்
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின்
ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON