சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1400 களிலே) இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி, அவர்கள்
பணியால் வளர்ச்சி யடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால்
வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று,
இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில்
எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத்
திகழ்கின்றது.
கல்வெட்டில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி (ARE 168, 169, 1961-62) இந்நூலகம் கி.பி. 1122 முதலே இருந்தற்கான அடிக்கோள்கள் உள்ளன.
இங்குத் தமிழ், தெலுங்கு, சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு,
செருமன், இடாய்ச்சு, இலத்தீன்,
கிரேக்கம்முதலிய பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும்
உள்ளன.கி.பி. 1703 இல், சுவடியில்
எழுதப்பட்ட சீவக சிந்தாமணி உள்ளது.
வரலாறு, மருத்துவம், அறிவியல்,
இசை, நாட்டியம், சிற்பம்,
மதம், தத்துவம் முதலிய பலகலைகளில் சிறந்த
நூல்கள் உள்ளன. 16, 17 நூற்றாண்டுகளில் தஞ்சையை ஆண்ட நாயக்க
அரசர்கள் சமற்கிருதம், தெலுங்கு, தமிழ்
நூல்களைப் கொண்டு வந்து சேர்த்தனர். மகாராட்டிர அரசர்கள் மேலும் பல நூல்களைச் சேர்த்து
நூல்நிலையமாக மாற்ற, ஊக்கத்தோடு செயற்பட்டனர்.
இரண்டாம் சரபோசி 1820 ஆம் ஆண்டு
காசிக்கு சென்றபோது, ஏராளமான சமற்கிருத நூல்களை கொண்டு வந்து
சேர்த்தார். மேலும், இவர் காலத்தில், மேனாட்டு
மொழியிலான 5000 அச்சுப்புத்தகங்களும், பல
சிறந்த ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. ஆகையால் தான், இந்நூலகம்
சரபோஜி சரசுவதி மகால் நூல்நிலையம் என்று வழங்கப்பெறுகிறது.
இந்நூலகத்திற்கு வெளியே கொலுமண்டபமாக இருந்த ஒரு மண்டபத்திலே,1807-இல் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் நிறுவப்பெற்ற
சரபோசி மன்னரின் உருவச்சிலை அழகாக அமைந்துள்ளது.
பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட சாமுத்திரிகா என்ற அரியநூல்
ஒன்றும் உள்ளது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. 1918 இல் தஞ்சை மராட்டிய மன்னரின் சந்ததியர், தமது சொந்த உடைமையாக்கி, இந்நூலகத்தைஅரசாங்கத்திடம்
ஒப்புவித்தனர். இப்பொழுது தமிழ்நாடு அரசால் மேலாண்மை செய்யப்படுகிறது
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON