சிவகங்கை மருதுபாண்டிய மன்னர்கள் ஆண்ட பூமி. இந்நகரை செவ்வேங்கை என்றும் சிவகங்கை என்றும் சொல்வதுண்டு. சிவகங்கை அரண்மனை கொஞ்சம் பழுதுபட்டிருந்தாலும் அழகுமிக்க கலையம்சம் இன்னமும் மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்துகின்றது. கௌரி விலாசம் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை மறவ அரசர்களுக்கு சொந்தமானது. இந்த அரண்மனை திருமலைநாயக்கர் கால ராஜ்புதானா கலைபொருந்தியது. இந்த அரண்மனையின் உள்ளே 1730ம் ஆண்டு கட்டப்பட்ட ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக மாலை நேரம் மட்டும் அனுமதிக்கப்படுவர். மற்றபடி சிவகங்கை அரண்மனை பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. தெற்கு கோவில் பெரிய வளாகத்தை கொண்டது. இந்த வளாகம் பெரிய தூண்களை கொண்டது. இந்த அரண்மனைக்குள் “நடைகிணறு” எனும் நீச்சல் குளம் உள்ளது. குளிர்ந்த நீர் இரண்டு டாங்குகளில் நிரப்பப்பட்டு நீச்சல் குளத்தில் விடப்படுகிறது. இதை அரண்மனை பெண்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும். செப்டம்பர், மார்ச் மாதங்கள் இந்த அரண்மனையை பார்வையிட உகந்தவையாகும்.
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON