ஐந்து
வருடங்களுக்கு முன்பு இதே தினத்தில் இசைப்பிரியா உள்ளிட்டவர்கள் கொலைக்களத்தில்
நிறுத்தி வைத்திருந்த பொழுது,
1. இறுதிக் கணங்களில் நிகழும் படுகொலையையும், இனப்படுகொலையையும் தடுக்க அனுப்பப்பட்ட விஜய் நம்பியார் கொழும்பு விடுதியை விட்டு வெளியேறவில்லை.
2. இனப்படுகொலை நடக்க இருக்கிறது என்று அறிந்த , ஐ.நாவின் இனப்படுகொலை தடுப்பு அதிகாரி உலகிற்கு அறிவிக்க வேண்டிய தனது கடமையை தட்டிக்கழித்தார்.
3. ஜான் ஹொல்ம்ஸ் எனும் இலங்கை பிரச்சனைக்கான ஐ.நாவின் உயர் அதிகாரி இலங்கை அரசின் அழுத்தத்திற்கு உட்பட்டு அமைதிகாத்தார்.
4. வெள்ளைக்கொடியுடன் வருபவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வோம் என விஜய்நம்பியாரிடமும், மேரி கோல்வின் எனும் பத்திரிக்கையாளர் உள்ளிட்டவர்களிடமும், இந்திய அரசிடமும் சொல்லிவிட்டு படுகொலை செய்த பொழுது ஐ.நாவோ, அமெரிக்காவோ, இங்கிலாந்தோ கேள்வி எழுப்பவில்லை. இந்தப்படுகொலையை இந்தியா ஆமோதிக்க இலங்கை செய்து முடித்தது.
5. திமுகவின் தலைமை தில்லியில் தமது குடும்ப உறுப்பினர்களின் பதவிக்காக அலைந்து கொண்டிருந்தது. தமிழகத்தில் கடுமையான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்திருந்தது.
6. அமெரிக்காவின் ஏழாவது கட்டளைப் படையில் தலைமை அதிகாரி மே15இல் இருந்து இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து கொண்டு இந்தியப் பெருங்கடலில் தமக்கும் பங்கு வேண்டுமென்று பகிரங்கமாக அறிவித்துக்கொண்டிருந்தார்.
7. தமிழக மக்களிடம் தமிழீழ தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று செய்தியை அறிவித்து, தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்தியை இந்தியாவின் பிரதான ஊடகங்கள் மறைத்தன. NDTV, Hindu, Times Now, CNNIBN போன்ற ஊடகங்கள் இலங்கை ராணூவத்துடன் இணைந்து நின்று போரினை காட்சிபபடுத்தி இலங்கையின் செய்தியை இந்தியாவிற்கு அறிவித்து திசை திருப்பின.
8.தமிழகம் வீதிக்கு வராமல், எந்த ஒரு வலிமையான எதிர்ப்பினையும் பதிவு செய்யாமல் சரணடைந்தது. இந்த நிகழ்வே எங்களுக்கு அமைப்பாக வேண்டுமென்கிற கட்டாயத்தினை அளித்தது.
9 இந்தப்படுகொலைகளை தொழிற்நுட்ப உதவியால் உலகின் வல்லரசுகள் அறிந்திருந்தாலும், அமைதி காத்தன. இலங்கையை மறைமுகமாக ஊக்கப்படுத்தின.
இந்தியா முதன்மை எதிரி, அமெரிக்கா-இங்கிலாந்து-சீனா தமது பிராந்திய நலனுக்காக பல்லாயிரம் தமிழர்களை கொலைசெய்வதை நியாயப்படுத்தியது. ஐ.நா இவர்களின் திட்டத்தினை செயல்படுத்தியது... இந்தச் சூழலில் தான் இசைப்பிரியா எதிரிகளால் வீரமரணம் அடைந்தார்.
புலிகள் இவர்கள் அனைவரையும் எதிர்த்துப் போர் புரிந்தார்கள். நாம் இவர்களில் யாரோ ஒருவர் நமக்கான நீதியை தரப்போகிறார் என்று பசப்பு அரசியல் பேசுகிறோம்.
மக்களிடம் செல்லாமல், மக்களை திரட்டாமல், ஈழ அரசியலை வெல்ல முடியாது.. இயக்கங்களோடு மக்கள் கைகோர்த்து வீதிக்கு வரும் நாளே ஈழவிடுதலைக்கான தினம்.

மே18 , 2009, ஒட்டுமொத்த
தமிழகமும் அரசியல் தற்கொலை செய்துகொண்ட தினம்.
அரசியல் தத்துவங்களை வைத்து மயிர் பிளக்கும் வாதங்களை விவாதிக்கும் எவரும், வீரவசனங்கள் பேசும் எவரும், மனித நேயம் பேசும் எவரும், புரட்சி பேசும் எவரும் இந்திய அரசிற்கு எதிராக ஒரு கல்லைக் கூட எரியாமல் இந்தியாவிடம் சரணடைந்த தினத்தின் நினைவு நாள் இன்று.
தமிழீழத்தில் ஒடுக்கப்படும் செய்திகளை நாம் தினம் தோறும் கேட்ட போதிலும், தமிழகத்தின் செயலற்ற தன்மை இன்றளவும் மாறவில்லை.
கொலை களத்திற்கு இழுத்து வரப்படும் இசைப்பிரியாவின் படங்களைப் பார்த்து அமைதியாக கடந்து போவோரில் நானும் இருக்கிறேன் என்பதை அவமானத்துடன் ஒத்துக்கொள்கிறேன்.
நம்மை எல்லாம் நம்பி புலிகள் களத்தில் நிற்கவில்லை.
இசைப்பிரியாவின் முகத்தில், ”எவரேனும் நம்மை காக்க வருவார்களா” என்ற எந்த ஒரு எண்ணமும் ஓடியதாக தெரியவில்லை.
சிறைப்பட்ட எவரின் முகத்திலும் அந்த எதிர்பார்ப்பு இல்லை.
விடுதலைக்காக வீரமரணத்தினை எதிர்நோக்கும் மனம் தான் அனைவரின் முகத்திலும் தெரிகிறது.
தமிழகத் தமிழர்களே! கட்சிக்கும், சாதிக்கும், மதத்திற்கும், சினிமாவிற்கும் விசுவாசமாக இருக்கும் நாம் என்று இவற்றினையெல்லாம் கடந்து சர்வதேசம் தொடுத்துள்ள இப்பெரும் போரினை எதிர்கொள்ளப் போகிறோம்?...

நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON