நினைத்தாலே நெஞ்சம்
குளிரெடுத்த மாதிரி நடுங்குகிறது.
ஊர் ஊராக இடம் பெயர்ந்து கொண்டே,
சரமாரியான குண்டுவீச்சில் பிழைத்துகொண்டே வந்து மாணிக்பாம் முகாமில்
மூச்சுவாங்க நின்ற குழைந்தைகளில் இவளும் ஒருத்தி..!
வஞ்சம், சூழ்ச்சி,பஞ்சம் பட்டினி என
சொல்லொனா துயரம் தாங்கிய சிங்கள முகாம் வாழ்க்கையில் இருந்து எப்படியோ
அறுத்துக்கொண்டு படகில் தப்பி, தமிழக கடற்கரையில் அகதியாக
விழுந்த எத்தனையோ பேரில் இந்த தேவதையும் ஒருத்தி…
சிங்களவனின் முகாமில் தப்பிய அகதி வாழ்க்கை, தாய் தமிழகத்திலும் தொடர்ந்தது. வேறு வேறு விதத்தில். நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக பட்ட அவமானங்கள் ஆயிரம். அத்தனையும் சகித்துக்கொண்ட எத்தனயோ
பேரில் இந்த சிறுமியும் ஒருத்தி.
எந்த நாடென்றாலும் சரி. அங்கேயும் அகதி வாழ்க்கைதான். என்றாலும் ஒரு
கௌரவமான வாழ்க்கையாவது மிஞ்சட்டும் என்று முடிவெடுத்த பெற்றோரின் முதுகில் ஏறி, படகில் அமர்ந்து திசை தெரியா கடல் பயணத்தில் ஆஸ்திரேலியாவை நோக்கி பயணமான
சிலரில் இந்த குழந்தையும் ஒருத்தி..
வழிநெடுக்க வாந்தி மயக்கம், உடல்நலக் குறைவென்று பட்டு
துடித்து, அலை வந்து கவிழ்க்குமோ, ஆழி
வந்து சுருட்டுமோ என்று அஞ்சி நடுங்கி, தத்தித் தப்பிய
படகில், கரைகண்டால் வாழ்க்கை, கடல்கொண்டால்
மரணம் என்று பயணித்து, ….கடைசியில் அந்தப்படகும்
பழுதாகிப்போக வாழ்க்கையே கேள்விக் குறியாகி நின்று தவித்த பட்டியலில் இந்த
அறும்பும் ஒன்று.
இறுதியில் அந்த வழியாக வந்த சர்வதேச கப்பல் அவர்களை மீட்டு அருகில்
இருந்த நாடான துபாயில் ஒப்படைக்க, இப்போது அந்த நாட்டு ‘அகதி சிறை’ வாழ்க்கையில் விழுந்து துடிக்கும்
மீன்களில் இந்த குட்டி தேவதையும் ஒருத்தி…
இன்னும் மீளாத் துயரோடு..தாய் தமிழகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச
சுதந்திரமுமின்றி அவதிப்படும் அந்த வாழ்க்கையிலும் ‘நம்பிக்கை
வெளிச்சமாய்’ இருபவள்தான் இந்த சிறுமி. என்று யாருக்கும்
தெரியும்.??
இந்த வயதில் துயரங்களை மட்டுமே சுமந்துகொண்டு, அலைகழிப்பு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் பெற்றோருக்கு ஒரு அழகு
தேவதயாக இருக்கும் இந்த சிறுமியின் வலி யாருக்குத் தெரியும்..??
அவளின் பிறந்த நாளில்(24.12.2013) ‘இனத்திற்கும்,
மொழிக்குமான’ எதிர்கால நம்பிக்கையாய் வா
வென்று வாழ்த்துவதை தவிர வேறென்ன இருக்கப்போகிறது நம்மிடம்..
- பா. ஏகலைவன்
(பொறுப்பாசிரியர் நியூஸ் சைரன் வார இதழ்
(இந்தக் குழந்தை வல்வை அகலினியனின் இரண்டாவது மகள் தரணிகா என்பது
குறிப்பிடத்தக்கது.)
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக உங்கள் பதிவை இட்டு செல்லுங்கள்
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக உங்கள் பதிவை இட்டு செல்லுங்கள்
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON