Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சிகரெட்டை நிறுத்த முடியவில்லையா? இதோ ஒரு எளிய டெக்னிக்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பி ப்ரவரி 4 – உலக புற்றுநோய் தினம். உலகம் முழுதும் எய்ட்ஸ், மலேரியா, மற்றும் டி.பி. எனப்படும் காசநோய் இவற்றால் இறப்பவர்களின் கூட்டுத் ...

பிப்ரவரி 4 – உலக புற்றுநோய் தினம். உலகம் முழுதும் எய்ட்ஸ், மலேரியா, மற்றும் டி.பி. எனப்படும் காசநோய் இவற்றால் இறப்பவர்களின் கூட்டுத் தொகையைவிட புற்றுநோயால் இறப்பவர்களின் கூட்டுத் தொகை அதிகம்.
2015 இல் இந்தியாவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 7 லட்சத்தை தாண்டிவிடுமாம். புற்றுநோயாளிகள் பெரும்பாலானோர் புகையிலையை ஏதோ ஒரு ரூபத்தில் உபயோகிப்பவர்கள் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயை தரும் தீய பழக்கங்களில் முதன்மையானது சிகரெட் பிடிப்பது. நம் உடலை ஆரோக்கியத்தை சீரழிக்க வல்லது.
சிகரெட் பிடிப்பவர்கள் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு என்று தான் வாங்குவார்கள். அதற்கு மேல் பெரும்பாலானோர் வாங்குவதில்லை. சிலர் அதிகபட்சம் அரை பாக்கெட் வரை வாங்குவார்கள். 100 ல் ஒருவர் ஏன் ஆயிரத்தில் ஒருவர் தான் ஒரு பாக்கெட் வாங்குவார்.
மற்ற பொருட்களை போல சிகரெட் பழக்கம் உள்ள பலர் அதை வாங்கி ஸ்டாக் வைப்பதில்லை. ஏன் தெரியுமா?
அந்த பழக்கத்தை எந்த நொடியாவது துறந்துவிடுவோம் என்ற நம்பிக்கை தான். அப்படி ஒருவேளை திடீர் ஞானோதயம் வைராக்கியம் வந்து சிகரெட்டை நிறுத்திவிட்டால் அப்போது வாங்கி வைத்திருக்கும் இந்த சிகரெட்டுக்களை அதற்காகவாவது பிடித்து தொலைக்கவேண்டி இருக்குமே என்கிற எண்ணம் தான் இதற்க்கு காரணம்.
So, இதிலிருந்து சிகரெட்டை எவருமே விரும்பி பிடிப்பதில்லை. ஒருவித குற்ற உணர்வுடன் தான் பிடித்து வருகிறார்கள்.

சிகரெட் புகையை மிகவும் ஆனந்தமாக கருதுபவர்கள் இந்த விஷயத்தை தெரிந்துகொண்டால் நிச்சயம் அதை உடனே நிறுத்திவிடுவார்கள்.
ஒரு சிகரெட்டை பற்றவைக்கும்போது சுமார் 4000  வேதிப் பொருட்கள் உருவாகின்றன. அவற்றில் 69 வேதிபொருட்கள் CARCINOGENS ஆகும். கார்சினோஜென் என்றால் என்ன தெரியுமா? கான்சரை தூண்டிவிடக்கூடிய காரணிகள் என்று அர்த்தம். அதைத் தவிர இதில் சிகரெட் புகையில் உள்ள பல பொருட்கள் ஆண்மையை பாதிக்கும் – மலட்டுத் தன்மையை தோற்றுவிக்கும் – பொருட்களாகும்.
சிகரெட் பற்றவைக்கும்போது உருவாகும் 2000 வேதிபோருட்களில் ஒரு சில நூறை பார்ப்போமா?
hhg
Add caption
மேலும் விரிவான தகவலுக்கு http://en.wikipedia.org/wiki/List_of_additives_in_cigarettes
சிகரெட்டில் உள்ள வேதிப் பொருட்களின் பட்டியலை பார்த்தாயிற்றா?
“இத்தனை நாள் இவ்வளவு கெமிக்கல்ஸ் நம்ம உடம்புக்குள்ளே போச்சா? உடம் என்னத்துக்கு ஆகிறது?” என்ற கவலை தோன்ற ஆரம்பிக்கும்.
சிகரெட்டை நிறுத்துவதற்கு ஒரு எளிய வழி!
நீங்கள் சிகரெட்டை நிறுத்துவதற்கு ஒரு எளிய ஆனால் பவர்புல் டெக்னிக் ஒன்னு சொல்றேன். இது நிச்சயமா பலன் தரும்.
நீங்க ரொம்ப விரும்பி பிடிக்கிற சிகரெட்டை ஒரு பாக்கெட் வாங்கிக்கோங்க. பாக்கெட்டை பிரிச்சி…. சிகரெட்டுகளை கையில எடுத்து நல்லா கசக்கி ஒரு குப்பைத் தொட்டியில போடுங்க. “இனிமே சிகரெட்டே பிடிக்கமாட்டேன்!” அப்படின்னு உறுதிமொழி எடுத்துக்கோங்க.
இதுவரைக்கும் நீங்க சிகரெட் பிடிச்சதை மனசுல இருந்து அழிச்சிடுங்க. உங்களுக்கு அந்த பழக்கம் இதுக்கு முன்னாடி கூட இருந்ததில்லை. இனியும் இருக்கப்போறதில்லை அப்படின்னு நம்புங்க.
சிகரெட்டை  நிறுத்தியபிறகு ஒரு ரெண்டு மூணு தரம் அந்த டெம்ப்டேஷன் இருக்கும். அதை வெற்றிகரமா தாண்டிட்டீங்கன்னா… அப்புறம் எப்பவுமே திரும்பி பார்க்க மாட்டீங்க.
அப்புறம் பாருங்க….. சிகரெட் வாசனை வந்தாலே நீங்க முக சுளிக்கிற அளவுக்கு முன்னேற்றம் இருக்கும்.
இவ்வளவு நாள் சிகரெட்டை பிடிச்சிருக்கோமே… இப்ப நிறுத்திட்டா மட்டும் பாதிப்பு போய்டுமா ? உறுப்புங்க கெட்டுப்போகாம இருக்குமா? என்று சந்தேகப்படுபவர்களுக்கு... இயற்கையின் அதிசயமே அது தாங்க. சிகரெட்டை நிறுத்திட்டு நிக்கோடின் உடம்புல போகாம இருந்தா உங்க உடம்பு தானாகவே தன்னுடைய பாதிப்பை சரி செய்துகொள்ளும். இயற்க்கை அதற்க்கு ஏற்றார்போல தான் உங்கள் உடம்பை படைத்துள்ளது. ஆனா அதுக்காக கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் யாரும் பண்ணாதீங்க.
BETTER LATE THAN NEVER. அவ்ளோ தான்!
சிகரெட்டை நிறுத்தினதுக்கு பிறகு பாருங்க.. உடம்புல எவ்ளோ முன்னேற்றம் இருக்கும் தெரியுமா?
சும்மா நாலு படி ஏறினா மூச்சு வாங்குறது இருக்காது.
சாப்பாட்டுல ருசி தெரிய ஆரம்பிக்கும்.
வேளா வேளைக்கு பசிக்கும்.
மருந்து மாத்திரை இதெல்லாம் நல்லா வேலை செய்யும்.
உடம்புல வியர்வையில இருந்து வர்ற ஒரு வித கெட்ட நாற்றம் நிற்கும்.
இதயம் நல்லா வேலை செய்யும். இதயத் துடிப்பு சீரா இருக்கும். etc. etc.,
இன்னும் சொல்லிகிட்டே போகலாம். சிகரெட்டை நிறுத்துவதால் ஏற்படும் நன்மையை சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஏதோ அங்கே இங்கே படிச்சிட்டு எழுதியிருக்கேன்னு நினைக்காதீங்க. எனக்கு பலன் தந்த டெக்னிக்கை மேலே சொல்லியிருக்கேன். (ஆமாங்க…. நான் சிகரெட்டை முழுசா நிறுத்தி ஆறு வருஷங்களுக்கும் மேல் ஆகப்போகுது!)
ALL THE BEST FOR TOBACCO FREE LIFE!
Thanks

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top