இது
பறவைகளுக்கு உகந்த சிறு ஏரிகளையும் மரங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின்
எறக்குறைய 300
ஆண்டுகள் பழமையான பறவைகள் சரணாலம்.
முன்பு பலர் வேட்டையாட வந்ததால் வேடந்தாங்கல் என்ற பெயர் பெற்றதாக பரவலாகக்
கருதப்படுகிறது. இங்கு வசிகும் மக்கள் 250 வருட காலமாக இந்த
இடத்தை பாதுகாத்து வருகின்றனர். ஏனெனில்,பறவைகளின் எச்சம்
விழுந்த எரியின் நீர் விளைச்சலை அதிகரிக்கவைக்கும் என்று அவர்கள் அறிந்து இருந்தனர். இங்கு
பல்லாயிரம் வகையான உள்ளூர் மற்றும் வெளியூர் (இந்தியா, கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா,
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையில் இருந்து)
பறவைகள் வருவதாக கூறப்படுகிறது.
பச்சைக்காலி, பவளக்காலி,
ஊசிவால் வாத்து, கூழைக்கடா, நீலச்சிறகி வாத்துகள், கிளுவை, செங்கால் நாரை, தட்டவாயன், உப்புக்கொத்தி(பட்டாணி
உள்ளான்), குருட்டுக்கொக்கு
(மடையான்), சிறுவெண் கொக்கு, உண்ணிக்கொக்கு,
நத்தைகுத்தி நாரை, மரத்தாரா, நீர்க்காகம், வெள்ளை அரிவாள் மூக்கன், கரடிவாயன், முக்குளிப்பான், சிரவி,
பாம்புத்தாரா, சாம்பல் நாரை,வக்கா, பெரிய கொக்கு மற்றும் புள்ளிவாத்து (Egrets,Spot
billed pelican, Painted stork, Great cormorant, Indian Cormorant, Darter,
Eurasian spoonbill, white ibis, night heron, pond heron and ducks like Comb
duck, pintails, common teals, Grey Heron, dabchick, Great Egret,
shoveller,black-winged stilt, little stilt, red shank, sand piper, ringed plover,
curlew, Asian openbill, Black-headed Ibis and Purple Heron).
பொதுவாக
கார்த்திகை தொடக்கம் முதல் பங்குனி வரை இங்கு பறவைகள் வரத்து
அதிகம் காணப்படும்,சுற்றி
அமைந்துள்ள மரங்களும்,
அதற்கு நடுவில் ஏரியும், பறவைகள் வந்து தங்கி
இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையாக அமைந்திருந்ததால், ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் இங்கு சீசன் காலத்தில் வருகின்றன.
பொதுவாக
எப்போதும் மூடப்பட்டிருக்கும் இந்த சரணாலயம், பறவைகள் வரும் சீசன் காலத்தில் மட்டுமே
திறந்திருக்கும். நவம்பர் முதல் மார்ச் வரை இங்கு செல்ல உகந்த காலமாகும்.இந்த
நவம்பர், டிசம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியா,
ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் குளிரான கால நிலை இருக்கும்.
அதில் இருந்து தப்பிக்கவே, பறவைகள் இந்தியா போன்ற வெப்ப
நாடுகளுக்கு வந்து இனப்பெருக்கம்
செய்கின்றன.
பின்டெய்ல், கார்கனே, கிரே வாக்டெய்ல் என பல்வேறு வகையான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து இங்கு
வந்து இனப்பெருக்கம் செய்கின்றன.
இங்கு
வரும் பறவைகள்,
அங்குள்ள மரங்களில் அழகான கூடுகள் அமைத்து, அதில்
முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, அவை
கடல் கடந்து செல்லும் அளவுக்கு தயாராகும் போது, பறவைகள்
குஞ்சுகளுடன் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்புகின்றன.
இந்த
மிகப்பெரிய இனப்பெருக்க நடவடிக்கைகளை காண வேண்டும் என்றால், அதற்கு உகந்த
இடமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைக் கூறலாம். இந்த
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்க, அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகின்றனர்.
பறவைகளுக்கு
பாதுகாப்பு அளிப்பதோடு,
பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்தல் போன்ற விஷயங்களிலும் கிராம மக்கள்
ஒற்றுமையோடு ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வேடந்தாங்கல்
பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை அமைதியான பண்டிகையாகக்
கொண்டாடுகின்றனர்.
வேடந்தாங்கல்
பறவைகள் சரணாலயத்தில்,
ஒரு தொலைநோக்கிக் கருவி அமைக்கப்பட்டுள்ளது. மிக உயரமான களங்கரை
விளக்கம் போன்ற கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கும் தொலைநோக்கிக் கருவி மூலமாக,
அங்குள்ள பறவைகளை வெகு அருகாமையில் பார்க்கும் வசதி கிடைக்கும்.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON