Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சுவை மிகுந்த பனம்பழம் (பனங்காய் )
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பனை மரத்தின் பழம் பனம் பழம் மற்றும் பனங்காய் என்றும் கூறுவார்கள் இவை சுவை மிகுந்தவையாக இருக்கும் நாம் சிறுவயதில் நிறைய ...

பனை மரத்தின் பழம் பனம் பழம் மற்றும் பனங்காய் என்றும் கூறுவார்கள் இவை சுவை மிகுந்தவையாக இருக்கும் நாம் சிறுவயதில் நிறைய நண்பர்களுடன் சுட்டு அதை சுவைத்து இருப்போம் . நகரில் வாழ்ந்த நண்பர்கள் இந்த அனுபவத்தை பெற்று இருக்க கொஞ்சம் வாய்ப்பு குறைவு தான் இந்த பணங்காயே உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது இதற்க்கு நிறைய காரணங்கள் சொல்லலாம் ஓன்று தோட்டங்கள
அனைத்தும் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது மக்கள் தொகை பெருக்கத்தினால் காடுகள் எல்லாம் வீட்டடி நிலமாக மாறிவருகிறது .நிறைய பனைமரங்கள் வேட்டபடுகிறது சில பயன்பாட்டிற்காக இப்படியே போய்கொண்டு இருந்தால் நம்மலுடைய அடுத்த தலைமுறைக்கு இவ்வகை பனம்பழம் பற்றி தெரியாமலே போய்விடும் 

15
சமீ (6 அங்குலம்) தொடக்கம் 20 சமீ (8 அங்குலம்) வரை விட்டம் கொண்ட இவை குலைகளாகக் காய்க்கின்றன. நார்த் தன்மை கொண்ட இதன் தோல் கரு நிறமானது. இப் பழத்தில் இரண்டு அல்லது மூன்று விதைகள் இருக்கும். ஏறத்தாள 10 சமீ வரை அகல நீளங்களைக் கொண்ட சதுரப் பாங்கான வடிவம் கொண்ட இவ்விதைகள், அண்ணளவாக 2.5 சமீ தடிப்புக் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் நீண்ட தும்புகள் காணப்படுகின்றன. இத் தும்புகளிடையே களித் தன்மை கொண்ட, உணவாகக் கொள்ளத்தக்க, செம்மஞ்சள் நிறப் பொருள் உள்ளது. இது பனங்களி எனப்படுகின்றது. ஏனைய பழங்களைப் போல் இப்பழத்தை நேரடியாக உட்கொள்வதில்லை. இதனை நெருப்பில் சுட்டே உண்பது வழக்கம். நெருப்பில் சுட்ட இப் பழத்தின் தோலை உரித்து எடுத்தபின், களியைப் பிழிந்து உண்பார்கள்.

இக்களி கசப்புக் கலந்த இனிப்புத் தன்மை கொண்டது. இதை நேரடியாக உண்பது மட்டுமன்றி, இக் களியைப் பதப்படுத்திப் பல வகையான உணவுப் பொருள்களையும் செய்வது உண்டு. இக்களியைப் பிழிந்து, பாய்களிற் பரவி, வெய்யிலில் காயவிட்டுப் பெறப்படுவது பனாட்டு எனப்படுகின்றது. இது நீண்ட காலம் வைத்து உண்ணத்தக்கது. இப் பனாட்டிலிருந்து பாணிப் பனாட்டு என்னும் ஒருவகைப் உணவுப் பண்டமும் தயாரிக்கலாம்.

இக்களியை அரிசி மாவுடன் கலந்து பிசைந்து, உருண்டைகளாக்கிப் எண்ணெயில் பொரித்து எடுப்பர். இது யாழ்ப்பாணப் பகுதியில் பனங்காய்ப பணியாரம் எனப்படுகின்றது. தமிழ்நாட்டிலும் பாமன் ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இவகையான பனாட்டுகள் செய்யபடும் . இப்பொழுது இந்த பனாட்டுகள் உற்பத்தி குறைவாகவே காணபடுகிறது

நன்றி!!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top