முகத்திற்கு அழகு முத்துபோன்ற பற்கள் தான். அந்த பற்களை உரியமுறையில் பேணா
விட்டால், பாக்டீரியாக்களால் அரிக்கப்பட்டு சிதைந்து போய் விடுகின்றன.
குறிப்பாக தற்போது இளம் வயதிலேயே பலர் பற்களை பறிகொடுத்து வருகின்றனர். இது
குறித்து கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பல் சிறப்பு மருத்துவர் சி.ஆர்.ராஜ்குமார் கூறியதாவது;
பற்களின் இடைவெளியில் சிக்கும் உணவு துணுக்களில் வந்தடையும் பாக்டீரியா,
உணவு மற்றும் உமிழ் நீரில் தன
க்கு தேவையான சத்துக்களை எடுத்து கொண்டு டாக்சிம் எனப்படும் தேவையற்ற கழிவு
பொருட்களை வெளியிடுகின்றன.
இந்த கழிவு பொருளில் உள்ள வேதித்தன்மை பற்களின் மேற்புரத்தை அரிக்க துவங்கும். இது தான் பற்சிதைவின் துவக்கம். இந்த கால கட்டத்தில் பல் மருத்துவரிடம் சென்று சொத்தையை சுத்தம் செய்து அடைத்து விட்டால் பற்சிதைவு தடுக்கப்பட்டு, மீண்டும் பழைய பலத்தை அடையும்.
பல்லின் அமைப்பு மூன்று அடுக்குகளை கொண்டது. எனாமல், டெண்டின், பல்ப் . முதல் இரு அடுக்குகளில் உருவாகும் சொத்தையை சுத்தம் செய்து அடைத்து விடலாம். மூன்றவது அடுக்காகிய பல்ப்ஐ பாக்டீரியா சென்றடைந்தால் வலி அல்லது வலியுடன் கூடிய வீக்கம் உருவாகும்.
இந்த சமயத்தில் தான் வேர் சிகிச்சை எனப்படும் ரூட்கேனல் ட்ரீட்மென்ட் செய்து பல்லின் மேற்பரப்பு உடையாமல் செராமிக் கிரவுன் எனும் பல் நிறத்திலான குப்பி நிரந்தரமாக பல்லின் மேல் பொருத்தப்படுகிறது. இந்த குப்பியை தங்களது வசதிக்கு ஏற்ப பொருத்தி கொள்ளலாம். இந்த கட்டத்திலும் சிகிச்சை செய்யாவிட்டால் அதையும் தாண்டி பாக்டீரியா பல்வேரின் வழியாக எலுமை சென்றடைந்து, எலும்பு அரித்து வேரின் முனையை சுற்றி பாதிப்பை உண்டாக்கும்.
எலும்பின் பாதிப்பு சிறியதாக இருந்தால் மரத்து போகும். ஊசி மருந்து மூலம் அந்த பகுதியை சுத்தம் செய்து விட்டால், நாளடைவில் புதியதாக எலும்பு உற்பத்தியாகி அந்த இடம் உறுதியடையும். எலும்பின் பாதிப்பு பெரியதாக இருந்தால் அந்த இடத்தை சுத்தம் செய்து செயற்கை எலும்பு பொறுத்தலாம். இவ்வாறாக சிதைவு பல்லை அகற்றாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வலுவான பல்லை எடுத்து விட்டாலோ ஒரு மாதம் கழித்து செயற்கை பல் பொருத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உணவை நன்றாக மெல்ல முடியாது. சுற்றியுள்ள பற்களும் நாளடைவில் அதன் பலத்தை இழந்து விடும். செயற்கை பல் என்பது கழட்டி மாட்டுவது. செராமிக் பிரிட்ஜ் என்ற முறையில் நிரந்தர பல் பொருத்தப்பட்டு தற்போது இது முன்னேறி இம்ப்ளான்ட் என்ற முறையில் பொருத்தப்படுகிறது. இந்த முறையில் எங்கு பல் இல்லையோ அங்கு ஒரு வேர் பொருத்தப்பட்டு அதன் மேல் பல் பொருத்தப்படுகிறது. இது இயற்கை பல்லுக்கு இணையான பலம் கொண்டது.
உணவு துணுக்குகள் பற்களை மட்டும் பாதிக்காமல் ஈறுகளையும் பாதிக்கும். துவக்க கட்டத்தில் மாவு பொருள் போல் படிந்த நாளடைவில் கடினதன்மை அடைந்து சிறிது சிறிதாக ஈறுகளை அரிக்க துவங்கும்.
இந்த சமயத்தில் உரிய மருத்துவரிடம் சென்று பற்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மேலும் முன்னேறி எலும்பை அரித்து விடும். இவற்றினை அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும். அந்த சமயத்திலும் கவனிக்காவிட்டால் எலும்பு முற்றிலுமாக அரித்து பல் ஆடத்துவங்கி விடும். பின்னர் பல்லை எடுக்க நேரிடும். பற்சிதைவு மற்றும் ஈறு நோயில் இருக்கும் பாட்டீரியர்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் சென்று மற்ற உறுப்புகளை பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. அரைகுறையாக மென்று விழுங்கினால் உணவில் உள்ள முக்கிய சத்துக்கள் வயிற்றில் ஜீரணிக்க முடியாமல் வெளியேறுவதால் உடல் தளர்ச்சி அடையும்.
நாளடைவில் கீழ்தாடை முட்டில் வலி உண்டாகி அது ஒற்றை தலைவலி போன்று தோன்றும். எனவே பற்களை பாதுகாக்க ஒவ்வொரு முறையும் உணவு உட்கொண்ட பிறகு நன்கு வாயை கொப்பளித்து கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் சுத்தமாக வைத்திருந்தால் பற்களை ஆரோக்கியமாக வைத்து முத்துக்கள் போல் பற்களை ஜொலிக்க வைக்கலாம். பெற்றோர்கள் வளரும் தங்கள் குழந்தைகளை இந்த பழக்கவழக்கத்தை கற்று கொடுக்க முன்வரவேண்டும்.
அரைகுறையாக மென்று விழுங்கினால் உணவில் உள்ள முக்கிய சத்துக்கள் வயிற்றில் ஜீரணிக்க முடியாமல் வெளியேறுவதால் உடல் தளர்ச்சி அடையும். நாளடைவில் கீழ்தாடை முட்டில் வலி உண்டாகி அது ஒற்றை தலைவலி போன்று தோன்றும். எனவே பற்களை பாதுகாக்க ஒவ்வொரு முறையும் உணவு உட்கொண்ட பிறகு நன்கு வாயை கொப்பளித்து கொள்ள வேண்டும்.

வாழ்க வளமுடன்
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON