உலகிலேயே மிக அதிக
உயரத்தில்
இருந்து
விழ
கூடிய
நீர்வீழ்ச்சி..!
அனைவருக்கும் அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்திருக்கும், பலர் அதைத்தான் உயரமான நீர்வீழ்ச்சியாக கருதிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் உயரமான நீர் வீழ்ச்சி தென் அமெரிக்க கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டிலுள்ள ” ஏஞ்சல்” நீர்வீழ்ச்சியாகும்!

சுமார் 979 மீற்றர் உயரமுள்ள இந்த நீர்வீச்சியில் இருந்து ஒரு துளி தரையை அடைய 14 விநாடிகள் எடுக்கின்றன.
இவ் நீர் வீழ்ச்சி ” Tepui (தெபுய்) ” எனும் செங்குத்து மலைச்சரிவினூடாக பாய்கிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ் நீர்வீழ்ச்சி நீரைப்பாய்ச்சி வருகிறது. ஆரம்பத்தில் இவ் நீர்வீழ்ச்சியை அவ் இடத்தை அண்டிய செவ்விந்தியர்கள் ” Churun Meru ( சுருன் மேரு) ” என்று அழைத்தார்கள். அப்படியென்றால் ஏன் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி என்கிறார்கள் என ஜோசிக்கிறீர்களா?
1935 ஆம் ஆண்டு, அமெரிக்க விமானியான ஜிம்மி ஏஞ்சல் என்பவர் தங்கத்தை தேடி மலைகளின் மேல் பறந்து தெரிந்த போது இவ் நீர்வீழ்ச்சியைகண்டு அதை உலகின் பார்வைக்கு கொண்டுவந்தார். அதனால் ” ஏஞ்சல்” என்ற பெயருடன் அவரின் நினைவாக இந்த நீர்வீழ்ச்சி இன்றுவரை அழைக்கப்படுகிறது.இறைவன் படித்ததில் எண்ணற்ற அதிசியங்கள் உலகத்தில் இருக்கிறது . அதில் இதுவும் ஒன்றாகவே கருத படுகிறது.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON