மாத்தூர்
தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவிலேயே
மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர்
பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து
பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில்
கட்டப்பட்டுள்ளது.
மாத்தூர்
என்னும் கிராமம் திருவட்டாற்றிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலையிலும், இந்தியாவின்
தென்முனையாகிய கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் நாகர்கோவிலில் இருந்து 45 கி.மீ.
தூரத்திலும் அமைந்துள்ளது. இவ்வூர் குழித்துறை இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ.
தொலையிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 70 கி.மீ. தொலையிலும் அமைந்திருக்கிறது.
பாலத்தின்
சிறப்பியல்புகள்:
இரண்டு மலைகளை
இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி
உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும்
ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன.
பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி
அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது.
பெயர் காரணம்:
தொட்டி வடிவில்
கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற
அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின்
நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும்
அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர்
பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக
தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.
மாத்தூர்
தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய
இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.
மாத்தூர் தொட்டிப் பாலம் கீழாக ஓடும் ஆறு
நம் நாட்டின்
இருக்கும் மாத்தூர் தொட்டிப் பாலம்!! ஆசியாவிலே மிகவும் உயரம் ஆனதும் நீளமானதுமான
மாத்தூர் தொட்டிப்பாலம்,
பார்க்குமிடங்களெல்லாம் நெருக்கமாகக் காணப்படும் தென்னை மரங்கள்....
கோடைக் காலத்திலும் வற்றாத ஆறுகளென, கேரளத்தின் சாயலோடு காணப்படும் மலைப் பாங்கான
பிரதேசம் மாத்தூராகும். தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில்
நாகர்கோயிலுக்கு அருகில் மாத்தூர் அமைந்திருக்கிறது.
ஒரு காலத்தில்
மலைப்பாங்கான காடுகளாகவிருந்த கணியான் பாறையென்ற மலையையும் கூட்டு வாயுப்
பாறையென்ற மலையையும் இணைத்து, பறளியாற்று நீரைக் கொண்டு செல்வதற்காக அவ்விரு
மலைகளுக்கும் நடுவே இப்பாலம் அமைந்துள்ளது.
தரைமட்டத்திலிருந்து
ஏறத்தாழ 115 அடி உயரத்திலே
நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலத்தின் நீளம் 1240 அடி( 1 கி.மீ)
நீளமுடையது. 40 அடி இடைத்தூரத்தில் அமைக்கப்பட்ட 28 இராட்சதத்தூண்கள் இந்தப்
பாலத்தைத் தாங்குகின்றன.
பறளியாற்றின்
நீரானது 7 அடி உயரமும் 7 அடி அகலமுமுடைய
பெரிய தொட்டிகளாகக் தொடுக்கப்பட்ட பகுதியால் கொண்டு செல்லப்படுகிறது. இரு
மலைகளுக்கு நடுவில் தொட்டில் போன்ற அமைப்புடன்
காணப்படுவதால் தொட்டில் பாலமெனவும் இப்பாலம் அழைக்கப்படுகிறது.
<== கீழாக செல்வதற்க்கு உள்ள படிக்கட்டு
சக்கர
நாற்காலியொன்று செல்லக்கூடிய அகலத்தை மட்டுமேயுடைய ஒடுங்கிய மேற்பகுதியினூடாக
பாலத்தின் ஒரு முனையிலிருந்து மறு பகுதிக்குச் செல்லமுடியும் . இரு
மலைகளுக்குமிடையே அடர்ந்து காணப்படும் தென்னை, ரப்பர் மரங்கள், நீல வானம், சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆறு என இயற்கை
அன்னையின் அருட்கொடைகள் யாவும் ஒருங்கே தெரியும் காட்சியை
விவரிக்க
எவரிடமும் வார்த்தைகளிருக்காது தான்.
பாலத்தின்
மேற்பகுதியில் நடப்போரின் பாதுகாப்புக் கருதி, நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நில
மட்டத்திலிருந்து நாம் நிற்கும் உயரத்தைக் கற்பனை செய்தால், நமது
கட்டுப்பாடின்றியே கால்கள் உதறத் தொடங்குவதைத் தடுக்க முடியாமல் போவதையும்
கையிலிருக்கும்
பொருட்கள் விழுந்துவிடுமோ என கை தன்பாட்டிலேயே அவற்றை இறுகப் பற்றிப் பிடிப்பதையும்
உணரலாம். அனுபவித்த எவரும் அதை மறுக்கமாட்டார்கள்.
வெளியான
இடமொன்றில் 115 அடி உயரத்திலிருந்து இயற்கையை ரசிப்பது கூட ஒரு சுகமான வித்தியாசமான அனுபவம்
தான். இயற்கையின்
அருள் மழையில் நனைந்தபடியே பாலத்தின் மறு முனை அடைந்தால் பார்க்குமிடங்களில்
எல்லாம் ரப்பர் தோட்டங்கள் மட்டுமே தெரியும். தோட்டங்களில் உள்ள ரப்பர்
மரங்களினிடையே சிறிய பெட்டிகள் காணப்பட்டன. ரப்பர்த் தோட்டங்களிலேயே சிறு கைத்தொழில்
முயற்சியாக, தேனீ வளர்ப்பும் இடம்பெறுவது தெரிந்தது. ரப்பர் மரங்களின் பூக்கும் காலத்தை
ஆதாரமாகக் கொண்டே இந்தக் கைத்தொழில் முயற்சி நடைபெறுகிறது. வீட்டுக்கு வீடு சுற்று
சுவர் போன்று அன்னாச்சி பழம் செடி உள்ளது.போகும் வழியாவும் செடி கொடிகளால்
கேரளாவின் தனி அழகில் நாஞ்சில் நாடு காட்சி தருகின்றது.
ஆரம்பித்த
இடத்துக்கு மீண்டும் வர இரு வழிகள் இருக்கின்றன. வந்த பாதையினாலே அதாவது தொட்டிப்
பாலத்தின் மேற் பகுதியாலேயே திரும்பி வரலாம். அல்லது, பாலத்தின்
அருகிலேயுள்ள படிக்கட்டுக்களால் திரும்பி வரலாம். பாலம் முடிவடையுமிடத்திலே
தொடங்கும் படிக்கட்டுக்களின் வழியே குறிப்பிட்ட ஆழம் வரை இயங்கிப் பின் அங்கே
அமைக்கப்பட்டுள்ள சுழல் படிக்கட்டுக்களின் வழியே ஆரம்பித்த இடத்தைச் சென்றடையலாம்.
பாலத்தில்
இருந்து கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை
உண்டு. அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் .
சில தமிழ் படங்கள் இப்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான
நினைவுகளை
மனதில் சுமந்து கொண்டு நடந்து செல்கின்றனர். மேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான
மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக
இத் தண்ணீரை பயன்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு இந்த சூழலின் வழி
நெடுகிலும் பூந்தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பாலத்தைப் பார்வையிட, கட்டணம்
எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
இந்தப் பாலம் 1966 ஆம் ஆண்டு
கட்டப்பட்டது. ஒரு காலத்திலே கன்னியாகுமாரி மாவட்டத்தின் விளவன்கோடு, கல்குளம் ஆகிய
பகுதிகள் மிகவும் வறண்ட பிரதேசங்களாக மாறியிருந்தன. அப்பகுதிகளுக்கான
நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும்
பிரதேசங்களாக அப்பிரதேசங்கள் மாறுமென எண்ணிய பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால்
உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும். அவரது பதவிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட
இத்திட்டம் அக்காலம் முடிவடைந்த பின்னரும் தொடரப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டதாகத்
தெரிவித்தனர். படிக்காத மேதை எனப் போற்றப்படும் காமராஜர் போன்ற நாட்டு நலனில்
அக்கறையுள்ள பெருந் தலைவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால், உலக நாடுகள்
யாவும் இன்று ஒரே நிலையில் இருந்திருக்கும்.
மாத்தூர் தொட்டிப் பாலத்தின் பயனாக பல ஹெக்டர் விவசாய
நிலங்கள் பயன் பெறத் தொடங்கின. தரிசு நிலங்கள் பல விவசாய நிலங்களாகின.
கன்னியாகுமரி மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு கண்டது
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON