மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுமங்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றபோதுதான் ஆங்கிலேயரின் அதிருப்தி மற்றும் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்
குழந்தை பருவம் : -
1748 ஆம் ஆண்டில் டிசம்பர் 15ஆம் தேதி உடையார்சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள நரிக்குடியில் பெரிய மருது பிறந்தார். 5 ஆண்டுகள் கழித்து 1753-ல் சின்ன மருது பிறந்தார்.
அரச சேவை :-
அரசி வேலு நாச்சியாருக்கு போர் பயிற்சியை கொடுத்தவர் சின்ன மருது என்றும் சொல்வார்கள். விஜயரகுநாத சேதுபதி மன்னன் சேது நாட்டை வென்றான். நாட்டை ஆளவந்த ஆங்கிலேயர்களின் தளபதி ஜோசப் சுமித் தஞ்சை மீது போர் தொடுத்தான். தஞ்சை மன்னன் ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான்.
முத்து வடுகநாதர் மரணம் :-
ஆங்கிலேய படையுடன் புதுக்கோட்டை தொண்டைமான் படை உதவி செய்து ராமநாதபுரத்தை முற்றுகையிட்டது. அதன் பிறகு சிவகங்கை சீமையை கைப்பற்ற நவாப் சூழ்ச்சி செய்தான். முத்து வடுகநாதர் போரில் மரணமடைந்தார். வேலு நாச்சியாரை காப்பாற்ற மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.
படை திரட்டல் :-
திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில், ஹைதர் அலியை சந்திக்கிறார்கள். அவரது பாதுகாப்பில் வேலு நாச்சியாரை தங்கவைக்கிறார்கள். 1772 முதல் 1780 வரை தலைமறைவு வாழ்க்கை நடத்தி, மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.
ஆற்காடு நவாப்பிற்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிராக படை திரட்டும் மருது சகோதரர்கள் கட்டபொம்மன் தலைமையில், இணைப்பை ஏற்படுத்துகிறார்கள். ஹைதர் அலியின் உதவி அவர்களுக்கு கிடைக்கிறது. ஊமத்துரையும், சின்ன மருதுவும் நெருக்கமான நண்பர்களாகிறார்கள். சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில், அடிப்படை மக்களுடன் இரண்டறக் கலந்து வாழத் தெரிந்த மருது சகோதரர்கள், சுதந்திரப் படையைத் திரட்ட முடிகிறது.
ஆட்சி மீட்பு :-
1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆற்காடு நவாப், தொண்டைமான் மற்றும் கும்பினியர்களின் படைகளை வெற்றி கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். அரசியாரின் போர் வியூகத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது.
வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்து கூறினார். மருது சகோதரர்களை அரச பிரதிநிதிகளாக வேலு நாச்சியார் அறிவித்தார். காளையார்கோவிலை சீரமைத்ததிலும், குன்றக்குடிய முருகன் கோவில், ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புணரி சேவக பெருமாள் கோவில் ஆகியவற்றின் சீரமைப்புகளையும் மருது சகோதரர்கள் செய்கின்றனர்.

<<= = மருதுபாண்டியர் சிலை
மக்கள் பணி :-
குன்றக்குடியில் அரண்மனை ஒன்ற¨ கட்டியுள்ளனர். மருது பாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்றை அமைத்து, தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. மயூரி கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டுள்ளது. பெரிய மருது பிறந்த நரிக்குடியில் அவர்கள் தாய் பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப்பட்டுள்ளது. சகோதரர்கள் கலைகளை வளர்த்தனர். நாடகக் கலை வளர்ச்சி பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தேர் வழங்கியுள்ளார்கள். காளையார் கோவில் அருகே உள்ள சருகனியில் தேர் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
மருதுபாண்டியர் நினைவுத் தூண், திருப்பத்தூர் = = >>
போர் :-
1799ஆம் ஆண்டு கயத்தாரில் அக்டோபர் 17ஆம் நாள் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலப்படுகிறார். அதற்குப் பிறகு, வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமத்துரைக்கு சின்ன மருது அடைக்கலம் தருகிறார். அதற்காகவே 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள், சிவகங்கை மீது தாக்குதல்களை தொடுக்கின்றனர்.
முதலில் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி 3 மாவட்டங்களை மருது சகோதரர்கள் மீட்கின்றனர். மருது பாண்டியர்களுடைய போர் திறமையை அடக்குவதற்காக, ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து அதிகமான படை பலத்தைப் பெற்று வந்ததாக ஒரு வரலாற்று செய்தி உண்டு. காளையார் கோவிலில் ஆங்கிலேயர்களுடைய படை மருது பாண்டியர்களுடைய படையை சுற்றி வளைத்தனர் , ஆனால் மருது சகோதரர்கள் தப்பிவிட்டனர்.
விருப்பாச்சியில் ஆங்கிலேயர் படையுடன் மோதி, சகோதரர்கள் வென்றிருக்கிறார்கள் என்றும் சரித்திரம் இருக்கிறது. போர் வீரர்களாக மட்டுமில்லாமல், நிர்வாகத் திறமையையும் மருது சகோதரர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 1753லிருந்து 1801 வரை மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்கள். பல்வேறு ஊரணிகளையும், குளங்க¨யும் கட்டியிருக்கிறார்கள். இன்றும் கூட அவை ஆதாரமாக அங்கே இருக்கின்றன.
ஆனால், இன்றைய நிர்வாகத்தினர், அவற்றை சரியாகப் பராமரிக்காத காரணத்தினாலும், தூர்வாரி ஆழப்படுத்தாத காரணங்களினாலும், அவை நீரை தேக்கி நிறுத்தி, வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இல்லாமல் ஆகிவிட்டன. மருது சகோதரர்கள் காலங்களில் சிவகங்கை வட்டாரம், பசுமையாக இருந்தது என்று கூறுகிறார்கள். மருது சகோதரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சோழபுரத்தில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, 1801 ஆம் ஆண்டில் அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்படுகிறார்கள். அன்று குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.

<<=== மருதுபாண்டியர் நினைவு மண்டபம்
போர் களம் :-
அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய போர் களங்களை, மனலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கை போர், மங்களலம் போர், மானாமதுரை போர், மானாமதுரை போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனூர் போர், காரான்மலை போர் என்று பட்டியல் போட்டு கூறுகிறார்கள்.
மரணம் :-
மரணம் :-
சிவகங்கைச் சீமையை ஆண்ட பெரிய மருதுவும் சின்னமருதுவும் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததினால் ஆங்கிலேயர்களின் வெறுப்பிற்கு ஆளாகி அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட மருது சகோதரர்கள், அவர்களது விருப்பப்படி காளையார் கோவில் கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டனர்.
மருது சகோதரர்களின் தபால் தலை == >>
நாட்டிற்காக இன்னுயிர் ஈந்த மன்னர்கள் என்பதாக அவர்கள் வழங்கப்படுகிறார்கள். 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் மருது சகோதரர்களின் படம் கொண்ட அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.
மருது சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காளீஸ்வரர் கோயிலின்உட்புறமும் மருது சகோதரர்களின்சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்புறமும் அமைக்கப்பட்டுள்ளன
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON