மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுமங்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றபோதுதான் ஆங்கிலேயரின் அதிருப்தி மற்றும் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801-ம் ஆண்ட அக்டோபர் 24-ல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கில் இடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார்கோவிலில் அமைந்துள்ளது.
நன்றி!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON