இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள உலகப் பிரசித்திப் பெற்ற நினைவுச் சின்னமே தாஜ்மகால் ஆகும். 2009 - ஆம் ஆண்டு நடந்த புதிய உலக அதிசயங்கள் தேர்வில் இந்த தாஜ்மகால் முதல் இடத்தைப் பிடித்தது.
தாஜ்மகாலை இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் வம்சத்தில் வந்த ஷாஜகான் தனது மூன்றாவது இளம் மனைவியான மும்தாஜ் மகாலின் நினைவாக கட்டினார். இக்கட்டட வேலையானது 22,000 வேலையாட்களைக் கொண்டும், 1000 யானைகளைக் கொண்டும் 1631 - ஆம் ஆண்டு தொடங்கி 1653 -ஆம் ஆண்டு வரை நடந்தது. இதைக் கட்டி முடிக்க அன்றைய மதிப்பில் 32 கோடி செலவிடப்பட்டது. இக்கட்டிடத்தை கட்டிய கலைஞர்களின் கைகள் இதைவிட சிறந்த பிரிதொரு கட்டிடத்தை உருவாக்காதிருக்கும் பொருட்டு வெட்டப்பட்டதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாஜ்மகால், பாரசீக, மத்திய ஆசியா மற்றும் முன்னைய முகலாய கட்டிடக்கலை மரபுகளை உள்ளடக்கிக் கட்டப்பட்டுள்ளது. தாஜ்மகால் முழுவதும் வெண்ணிற சலவைக் கற்களை பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதி வெள்ளை சலவைக்கற்களாலான சமாதி கட்டிடத்தைக் கொண்டது. தாஜ்மகாலின் நுழைவாயில் இதன் ஐந்து சிறப்பம்சங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த நுழைவாயிலை கட்டிமுடிக்க ஆறு ஆண்டு காலம் பிடித்தது. இது பளிங்கு கற்களிலேயே விலை உயர்ந்த கற்களால் கட்டப்பட்டுள்ளது.
தாஜ்மகாலின் மேற்கு பக்கத்தில் மெக்காவை நோக்கிய வண்ணம் ஒரு மசூதி உள்ளது. இது முழுவதும் சிகப்பு மண் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதியின் எதிர் பக்கம் தாஜ்மகால் ஓய்வு அறை என்று அழைக்கப்படும் கட்டிடம் உள்ளது. இதுவும் சிகப்பு மண் கற்களால் கட்டப்பட்டது.
அடுத்ததாக இங்கு புகழ் பெற்றதாக விளங்குவது தாஜ்மகால் தோட்டம் ஆகும். இது பாரசீக முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இது நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மையத்தில் இரண்டு வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON