உலகில் எண்ணற்ற வகையான பழங்கள் உள்ளன. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் விளையும் ஒரு பழத்திற்காக முன்பதிவு செய்து மாதக்கணக்கில் காத்திருப்பது வினோதமானது. அந்தப் பழம் துரியன் பழம்தான்!ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பழ மரங்கள் 'பர்லியார்' பகுதியில் காணப்படுகின்றன. '
துரியன் பழம் (முள்நாறி ) தென்கிழக்கு
ஆசியாவைப் பிறப்பிடமாகக்
கொண்டது. துரியன் பழத்தின் மேற்பரப்பு பச்சை நிறமும் பழுப்பு நிறமும் கலந்த ஒரு கலவை நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில் அதன் உள்ளே இருக்கும் பழத்தின் சுளை பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறச் சுளைகள் அரிதாகக் கிடைப்பதுண்டு. சராசரியாக ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. சிறிய அளவிலான பலாப்பழத்தைப்போலத் தோற்றமளிக்கும்
இப்பழங்களைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே அதிகபட்சமாக
7 சுளைகள் வரை காணப்படும். கூர்மையான முட்களைத் தவிர முள்நாறிப் பழத்திற்கு மற்றொரு தன்மையும் உண்டு. அது, அப்பழத்தின் தனித்துவம் மிக்க வாடை. பழக் கடைகளில், துரியன் பழத்தின் விலை கிலோ, 1,100 ரூபாயாக உள்ளது
இரத்தத்தில் அதிக கொழுப்பு பொருட்கள் படிவதால் இரத்த அடைப்பு ஏற்பட்டு இரத்தம் அசுத்தமாகிறது. இந்த கொழுப்பு சத்தை கரைத்து கலோரிகளாக மாற்றி இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
ஆண்களுக்கு விந்தணுக்கள்
குறைவால் குழந்தையின்மை
குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும். மலச்சிக்கலை நீக்கும் குணம் துரியன் பழத்திற்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியைக் ஏற்படுத்தும். கண்களின் பார்வை நரம்புகள் பலப்படும். தோலை பாதுகாத்து சருமத்தை பளிச்சிட செய்யும்.
Principle | Nutrient Value | Percentage of RDA |
---|---|---|
Energy | 147 Kcal | 7% |
Carbohydrates | 27.09 g | 21% |
Protein | 1.47 g | 2.5% |
Total Fat | 5.33 g | 20% |
Cholesterol | 0 mg | 0% |
Dietary Fiber | 3.8 g | 10% |
Vitamins | ||
Folates | 36 mcg | 9% |
Niacin | 1.074 mg | 7% |
Pantothenic acid | 0.230 mg | 4.5% |
Pyridoxine | 0.316 mg | 24% |
Riboflavin | 0.200 mg | 15% |
Thiamin | 0.374 mg | 31% |
Vitamin A | 44 IU | 1.5 |
Vitamin C | 19.7 mg | 33% |
Electrolytes | ||
Sodium | 2 mg | 0% |
Potassium | 436 mg | 9.5% |
Minerals | ||
Calcium | 6 mg | 0.6% |
Copper | 0.207 mg | 23% |
Iron | 0.43 mg | 5% |
Magnesium | 30 mg | 7.5% |
Manganese | 0.325 mg | 14% |
Phosphorus | 39 mg | 6% |
Zinc | 0.28 mg | 2.5% |
Phyto-nutrients | ||
Carotene-α | 6 mcg | -- |
Carotene-ß | 23 mcg | -- |
Lutein-zeaxanthin |
Subash
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON