Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ஒரே வாரத்துல 5 கிலோ குறைஞ்சிடும் பைன்ஆப்பிள் கோவா ( கொய்யா ) | feijoa fruit | Pineapple Guava
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பைன்ஆப்பிள் கோவா பார்ப்பதற்கு கொய்யா வடிவில் காணப்படுகிறது . இது உடல் எடை இழப்பு , சீரண சக்தியை அதிகரித்தல் , கொலஸ்ட்ராலை கு...
பைன்ஆப்பிள் கோவா பார்ப்பதற்கு கொய்யா வடிவில் காணப்படுகிறது. இது உடல் எடை இழப்பு, சீரண சக்தியை அதிகரித்தல், கொலஸ்ட்ராலை குறைத்தல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், எலும்புகளின் வலிமை அதிகரித்தல், இரத்த அழுத்தத்தை குறைத்தல், ஊட்டச்சத்துகள், மெட்டா பாலிசத்தை சமநிலையில் வைத்தல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், மூளை செயல்திறனை அதிகரித்தல், இரத்த சர்க்கரை அளவை குறைத்தல் போன்ற ஏராளமான நன்மைகளை தருகிறது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட  இதை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதில் ஒரு சில பக்க விளைவுகள் மட்டுமே ஏற்படுகின்றன. வயிறு பிரச்சினைகள், இரத்த சர்க்கரை அளவு குறைந்து போகுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பழத்தை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம். 
பைன்ஆப்பிள் கோவா என்றால் என்ன?
இந்த பைன் ஆப்பிள் கோவா பிஜியா என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் ஆக்லா சல்லியனா என்றழைக்கப்படுகிறது. அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. இது இனிப்பு பழம் என்பதால் சமையலில் அலங்கார நோக்கங்களுக்காக பயன்படுகிறது. இதை பார்ப்பதற்கு சிறிய அவகேடா பழம் போன்று காணப்படும்இதன் சுவை தனித்துவம் வாய்ந்தது. இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டது. லேசான ஸ்ட்ராபெர்ரி சுவை கொண்டும் காணப்படும். நன்றாக பழுத்த பிறகு புதினா சுவை அடிக்கும். மரத்தில் இருந்து இந்த பழத்தை பறிக்கும் போதே ஒரளவு பழுத்த வகையில் பறியுங்கள். ரொம்ப காயாக இருந்தால் கசக்கும். ரொம்ப பழமாக இருந்தாலும் சாப்பிட முடியாது. மீடியமான தன்மை இனிப்பு சுவையை தரும். 
நீங்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நோயெதிர்ப்பு சக்தி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், மெட்டா பாலிசம், ஆஸ்டியோபோரோசிஸ், சீரணமின்மை, டயாபெட்டீஸ், இரத்த ஓட்டம், மூளை செயல்கள், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகளை களைகிறது
இதிலுள்ள விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. விட்டமின் சி இரத்த வெள்ளையணுக்கள் உற்பத்திக்கும், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களின் பெருக்கத்தை தடுக்கவும் உதவுகிறது. இதிலுள்ள விட்டமின் சி அளவு நமது தினசரி விட்டமின் சி தேவையில் 50% பூர்த்தி செய்கிறதுஇந்த பைன் ஆப்பிள் கோவா பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். குறைந்த கலோரி, கார்போஹைட்ரேட் போன்றவை இன்சுலின் சுரப்பு உற்பத்தியை கட்டுப்பாட்டில் வைக்கிறது. 
100 கிராம் பழத்தில் 55 கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். அதிகளவில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் வேற உள்ளது. இந்த பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும் தினசரி ஊட்டச்சத்துக்களின் தேவை அடங்கி விடும். எனவே தேவையில்லாமல் சுகர், நொறுக்கு தீனிகள் தேவையில்லை. எனவே ஈஸியாக எடையை குறைத்து விடலாம்.

See the table below for in depth analysis of nutrients: Feijoa (Feijoa sellowiana), fresh, Nutritive Value per 100 g. (Source: USDA National Nutrient data base)

PrincipleNutrient ValuePercentage of RDA
Energy55 Kcal3%
Carbohydrates13 g10%
Protein0.98 g2%
Total Fat0.6 g2%
Cholesterol0 mg0%
Dietary Fiber6.4 g17%
Vitamins
Folates23 µg6%
Niacin0.295 mg2%
Pantothenic acid0.223 mg2.5%
Pyridoxine0.067 mg5%
Riboflavin0.018 mg1.5%
Thiamin0.006 mg0.5%
Vitamin A6 IU<1 td="">
Vitamin C32.9 mg55%
Vitamin E0.16 mg1%
Vitamin K3.5 µg3%
Electrolytes
Sodium3 mg<1 td="">
Potassium172 mg3.5%
Minerals
Calcium17 mg2%
Copper0.036 mg4%
Iron0.14 mg2%
Magnesium9 mg2%
Manganese0.084 mg4%
Phosphorus19 mg3%
Zinc0.06 mg<1 td="">
Phyto-nutrients
Carotene-ß2 µg--
Crypto-xanthin-ß3 µg--
Lutein + zeaxanthin27 µg--
Lycopene
Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top