Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: இன்றைய புனிதர் ஜூலை 26 புனிதர்கள் சுவக்கின் & அன்னம்மாள் (St.Joachim and Anne)
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இன்றைய புனிதர் ஜூலை 26  புனிதர்கள் சுவக்கின் - அன்னம்மாள்  (St.Joachim and Anne) இறைவனின் கன்னி மரியாளின் பெற்றோர் : (Parents of the B...
இன்றைய புனிதர் ஜூலை 26 புனிதர்கள் சுவக்கின் - அன்னம்மாள் (St.Joachim and Anne)
இறைவனின் கன்னி மரியாளின் பெற்றோர் : (Parents of the Blessed Virgin Mary)
பிறப்பு : கி.மு. 100 நாசரேத் (Nazareth)
இறப்பு : தெரியவில்லை எருசலேம், நாசரேத் (Jerusalem, Nazareth)
நினைவுத் திருநாள் : ஜூலை 26
கி.பி. 2ம் நூற்றாண்டின் மரபு வழி செய்திகளின்படி அன்னாவும், சுவக்கின் என்பவர்களும் இறைவனின் அன்னை, அதி தூய கன்னி மரியாளின் பெற்றோர்கள் என்று கூறப்படுகின்றது. 6ம் நூற்றாண்டிலிருந்தே அன்னாவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது. 10ம் நூற்றாண்டில் இப்பக்தி மிகுதியாக பரவியது. 12ம் நூற்றாண்டில், “பைசான்தீனியர்களும்” “சிலுவைப் போராளிகளும்” (Byzantines and the Crusaders ) இணைந்து, மத்திய இஸ்ரேலிலுள்ள “பெய்ட் குவ்ரின்” (Beit Guvrin National Park) தேசியப் பூங்காவில் புனித அன்னாவுக்கு ஆலயம் கட்டினார்கள்.

Church of St.Anne the home of Jesus’ maternal grandparents, Anne and Joachim, and the birthplace of the Virgin Mary at Jerusalem

மரபுகளின்படி “பெத்தலேகேமில்” (Bethlehem) பிறந்த அன்னா, “சுவக்கினை” (Joachim of Nazareth) திருமணம் செய்துகொண்டார். இருவரும் தாவீதின் (David) மரபுவழிமுரையினர் ஆவர். ஜேம்ஸின் குழந்தைப்பருவ நற்செய்திகளின்படி, (Protoevangelium of James) சுவக்கின் பணக்கார, பக்தி மிகுந்தவர் ஆவார். இவர் வழக்கமாக ஏழைகளுக்கும், எருசலேமின் வடமேற்கு திசையிலுள்ள “செஃபோரிஸ்” (Sepphoris) எனுமிடத்திலுள்ள யூதர்களின் வழிபாட்டு கூடங்களுக்கும் தான தர்மங்கள் வழங்குவார்.

Church of St.Anne the home of Jesus’ maternal grandparents, Anne and Joachim, and the birthplace of the Virgin Mary at Jerusalem

ஆரம்பத்தில் “கலிலேயா” (Galilee) நகரில் வாழ்ந்து வந்த அன்னை மரியாளின் பெற்றோர், பின்னர் எருசலேமில் வந்து வசித்தனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால், அவர்கள் தந்த தான தர்மங்கள் தெய்வீக அதிருப்திக்கு ஒரு அடையாளமாகப் புரிந்துகொள்ளப்பட்ட காரணத்தால், யூத வழிபாட்டு கூடங்களின் தலைமை குரு சுவக்கினையும் அவர் தந்த தானங்களையும் நிராகரித்தார். இதன் விளைவாக பாலைவனத்திற்குத் திரும்பிய சுவக்கின், நாற்பது நாட்கள் அங்கே விரதம், செபம் மற்றும் தவ முயற்சிகளில் ஈடுபட்டார். பின்னர், சுவக்கின் மற்றும் அன்னா இருவருக்கும் காட்சியளித்த தேவ தூதர்கள், அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று வாக்கு கொடுத்தனர். அதன் பின்னர் எருசலேம் திரும்பிய சுவக்கின், நகரின் நுழைவாயிலில் வைத்து அன்னாவை வாரியணைத்தார்.

                    Meeting Anna with Joachim at the Golden Gate  

சுவக்கினும் அன்னாவும் எருசலேமின் சுவர்ண நுழைவாயிலில் சந்தித்துக்கொண்ட சம்பவம், அன்னை மரியாளின் வாழ்வின் கலையாற்றல் மிக்க சம்பவமாக கருதப்படுகின்றது. அன்னை மரியாளின் பெற்றோர் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளனர். செப, தவ, ஒறுத்தல்கள் பல புரிந்து, நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு "மரியா" என்று பெயர் சூட்டினர். தங்களது ஒரே மகளை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும் சிறந்த பெண்ணாக வளர்த்தனர். இவர்கள் இறுதியாக எருசலேமில் வாழ்ந்துள்ளனர்.
12ம் நூற்றாண்டிலிருந்து அன்னை மரியாளின் பெற்றோர்களின் மீதிருந்த பக்தி உலகம் முழுவதும் பரவியது. 13ம் நூற்றாண்டிலிருந்து ஜூலை 26ம் நாள் இப்புனிதர்களின் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 1584ம் ஆண்டு “ரோம பொது நாள்காட்டியில்” (General Roman Calendar) பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இஸ்லாமிய பாரம்பரியம் :
இஸ்லாமிய மத நூலான புனித “குர் ஆனில்” (Quran) சுவக்கின் “இம்ரான்” என்று அறியப்படுகின்றார்.
அன்னா, புனித “குர் ஆனில்” (Quran) “ஹன்னா” (
annah) என்று அறியப்படுகின்றார்.
Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top