நாங்கள் வேலை செய்யும் அலுவலகம் மற்றும் கல்விக்காக செல்லும் கல்லூரிகளில் காணப்படும் இன்டர்நெட் இணைப்பின் வைபை கடவுச்சொல் பெரும்பாலும் எமக்கு தெரியாமலேயே இருக்கும். குறிப்பிட்ட கல்லூரியிலோ அல்லது அலுவலகத்திலோ இன்டர்நெட் இணைப்புக்களுக்கு பொறுப்பான ஒருவர், எமது கணனிகளுக்கும் லேப்டாப்-களுக்குமான வைபை கடவுச்சொல்லை அவரே டைப் செய்து தருவார்.
இந்த முறையில் தான் பெரும்பாலான அலுவலகங்கள் அல்லது கல்லூரிகள் செயற்படுகின்றன. ஆகவே இன்றைய பதிவில் இவ்வாறு எமது கல்லூரி மற்றும் அலுவலகத்தில் காணப்படும் கணணி மற்றும் லப்டாப்-இல் போடப்பட்டிருக்கும் வைபை நெட்வொர்க் உடைய கடவுச்சொல்லை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.
முதலாவதாக வைபை இணைப்புடன் இணைந்துள்ள கணணி அல்லது லேப்டாப்-இன் Start-ல் கிளிக் செய்து Control Panel-இற்கு செல்லுங்கள்.
அங்கே Network and sharing center என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து அதிலே இடது மூலையில் காணப்படும் Change adapter settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து அதை ரைட் கிளிக் செய்து Properties என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதன் பின்னர், Wireless Properties என்று காணப்படுவதை கிளிக் செய்யுங்கள்.
அங்கே காணப்படும் Security என்பதை கிளிக் செய்யுங்கள்.
இறுதியாக அங்கே Show characters என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது குறித்த வைபை நெட்வொர்க் உடைய மிகச் சரியான கடவுச்சொல்லை உங்களால் இலகுவாக பார்க்க முடியும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON