அன்றொஇட் போன்களுக்கென்று உருவாக்க்கப்பட்ட மிகச்சிறந்த செயலி ஒன்றுடன் இன்றைய பதிவில் உங்களை சந்திக்கின்றேன். பெரும்பாலான அன்றொஇட் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் காணப்படும் மிகப்பெரியதொரு குறை, தமது ஸ்மார்ட் போன் மந்தமாக செயற்படுவது.
எங்களுடைய அன்றொஇட் ஸ்மார்ட் போன் மெதுவாக தொழிற்படுகிறது என்றால், இதற்கு மிக முக்கிய காரணம், எமது ஸ்மார்ட் போனில் உபயோகிக்கப்பட்டிருக்கும் ரேம் பாவனையில் அளவு. எமது போனில் காணப்படும் ரேம் இல் 80% ஆனா ரேம் அனைத்து செயளிகளாலும் உபயோகிக்கப்பட்டு விட்டால், எமது போனின் செயற்பாடு மெதுவாக இருப்பதை அவதானிக்க கூடியதாய் இருக்கும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் அடுத்து செய்யப்போகும் வேலை, கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்து ரேம் பாவனையை கட்டுப்படுத்த ஒரு செயலி, போனை வேகமாக்க மற்றுமொரு செயலி என்று ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு செயலிகளை நிறுவுவோம்.
இவ்வாறு ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு செயலி என்று, எமது ஸ்மார்ட் போனில், ஸ்மார்ட் போன்களை பராமரிக்க கூடிய பல்வேறு செயலிகள் காணப்படுகின்றன.
ஆகவே உங்களது போனில் ஸ்மார்ட் போன்களை பராமரிக்க நிறுவி இருக்கும் செயலிகள் பற்றியது தான் இன்றைய பதிவு.
முதலாவதாக உங்களது போனில் நிறுவி இருக்கும் அனைத்து ஸ்மார்ட் போன் பராமரிப்பு செயலிகளையும் நீக்கி விடுங்கள். அதாவது உங்களது ஸ்மார்ட் போனை வேகமாக்க நிறுவி இருக்கும் செயலி, சிஸ்டம்-ஐ கூலாக வைத்து இருக்க நிறுவி இருக்கும் செயலி, ரேம் பாவனையை கட்டுப்படுத்த நிறுவி இருக்கும் செயலி என்று, ஸ்மார்ட் போன் பராமரிப்பு செயலி அனைத்தையும் நீக்கி விடுங்கள்.
ஏன் என்று ஆச்சிரியமாக கேட்கிறீர்களா? ஏனென்றால் மேலே குறிப்பிட்ட அனைத்து செயலிகளின் வேலையையும் கீழ்வரும் ஓரே செயலியில் இருந்து செய்து கொள்ள முடியும்.
எமது ஸ்மார்ட் போனை வேகமாக்குவதில் தொடங்கி, ரேம் பாவனையை கட்டுப்படுத்துவது முதல் எமது போன் சிஸ்டம்-ஐ கூலாக வைத்து இருப்பது என்று,
இப்போது இந்த செயலி மூலம் ரேம்-ஐ சுத்தப்படுத்துவது போனை வேகமாக்குவது, தேவையில்லாத பைல்-களை நீக்குவது என்று பல்வேறு வசதிகள் காணப்படும்.
இவை மட்டுமல்லாது மேலும் பல்வேறு வசதிகளை தருகிறது இந்த அருமையான செயலி. இந்த செயலியை ஆரம்பித்து இந்த செயலியில் ஒரு சுற்று வலம் வாருங்கள். அப்போது இந்த செயலி எங்களுக்கு இலவசமாக தரும் சிறந்த சேவைகளை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த அளவுக்கு சிறந்த வசதிகளை தரும் இந்த சிறப்பு அன்றொஇட் செயலியை வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
இந்த செயலி உங்கள் அன்றொஇட் போனில் இருக்கும் பட்ச்சத்தில் உங்களது போனில் வீணடிக்கப்படும் கிட்டத்தட்ட 300 MB அளவான ரேம் வெறும் 30 MB ஆக கட்டுப்படுத்தபடிகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு தேவைக்குமென்று தனித்தனி செயலிகளை நிறுவி ரேம் வாபனையை கூட்டுவதை விட வெறும் 30 MB அளவான ரேம்-ஐ மட்டுமே உபயோகிக்கும் இந்த சிறப்பு செயலி உங்களது அன்றொஇட் போனில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON