பூக்கோசு என்று சொல்லப்படும் காலிஃபிளவரின் தாயகம் பசிபிக் பெருங்கடல் பகுதி அருகே உள்ள நாடுகள்தாம். அமெரிக்காவில் அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் இது நன்கு விளைகிறது.
சீசன் சமயத்தில் தினமும் காலிஃபிளவர் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சத்துணவாக அமையும்.100 கிராம் பூக்கோசில் கிடைக்கும் கலோரி அளவு 33தான். எனவே, 200 கிராம் பூக்கோசைத் தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.
குறிப்பாக, உடல் குண்டாக உடற்பயிற்சி, பலவகையான சத்துணவு வகைகள் சாப்பிட்டும் உடலில் சதை கூடாமல் இருப்பவர்கள் பூக்கோசைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதனால் சீசன் முடிவதற்குள் ஒல்லியாய் இருப்பவர்கள் ஓரளவு குண்டாகிவிடுவார்கள்.
காரணம், இதில் மாவுச்சத்தும் உயர்தரமான புரதமும் தாதுஉப்புகளும் அடங்கி யுள்ளமையே. அதே நேரத்தில், படுகுண்டாய் இருப்பவர்கள் பூக்கோசை அளவுடன்தான் சாப்பிடவேண்டும். இல்லையெனில், அவர்கள் மேலும் குண்டாகிவிடுவார்கள்!
வாதநோய்காரர்கள் பூக்கோசை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது!
வளரும் குழந்தைகளுக்குத் தினமும் சூப்பாக சமைத்துக்கொடுத்தால் பூக்கோசில் உள்ள இரும்பு சத்து, திசுக்கள், நகம், முடி வளர உதவும். கந்தகச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், புரதம், மாவுச்சத்து ஆகியவற்றால் குழந்தைகள் வாட்ட சாட்டமாய்த் திடகாத்திரமாய் வளர்வார்கள்.
குழந்தைகளைப் போலவே சத்துணவுடன் இரத்த விருத்தி, ஆரோக்கியமான உடற்கட்டு தேவை என்று விரும்பும் பெரியோர்களும் பூக்கோசைத் தவிர்க்கக்கூடாது.
கைகால்களில் ஏற்படும் மூட்டுவலி குணமாகவும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் இதில் உள்ள வைட்டமின் ‘சி’ பயன்படுகிறது. 100 கிராம் பூக்கோசில் 55 மில்லிகிராம் அளவு வைட்டமின் ‘சி’ இருக்கிறது.
காலிஃபிளவரில் புழுக்கள் இருக்கும். எனவே, நன்கு கழுவின பிறகே சமைக்க வேண்டும்.
100
கிராம் பூக்கோசில் 1.2 சதவிகிதம் நார்ச்சத்து அமைந்துள்ளது. இது குடலில் தங்கியுள்ள கழிவுப்பொருள்களை வெளியேற்றிவிடுகிறது. மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. இரத்த ஓட்டத்தில் பித்தநீரும் கொழுப்பும் அதிக அளவு சேர்ந்துவிட்டால் நார்ச்சத்தே தடுத்துவிடுகிறது. இதனால் எல்லாவிதமான இதயநோய்களும் முன்கூட்டியே தடுக்கப்பட்டுவிடுகிறது.
மாரடைப்பு, அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு முதலிய நோய்கள் ஏற்படாமல் நீண்டகாலம் நலமாய் வாழவேண்டும் என்பதற்காகத்தான் பட்டாணி, மொச்சை போன்றவற்றைப் பலரும் தொடர்ந்து சாப்பிடுகிறார்கள். அவற்றில் உள்ளதைப் போலவே பூக்கோசிலும் நார்ச்ச்த்து தக்கவிகிதத்தில் அமைந்துள்ளது.
பூக்கோசு சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். நாக்கு வறட்சி, தோல்வறட்சி ஆகியன நீங்கும். சளித்தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு இந்த உணவே மருந்தாகும்!
அடிக்கடி தலைவலியால் சிரமப்படுபவர்களுக்குப் பூக்கோசு குணமளிக்கும். வைட்டமின் ‘ஏ’யும் சிறிதளவு இருப்பதால் கண் பார்வை தொடர்பாக ஏற்படும் தலைவலியும் உடன் குணமாகும்.
உடல் பளபளப்பிற்காகப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுகிறவர்கள் காலிஃபிளவரையும் தொடர்ந்து சாப்பிட்டு இதே நன்மையைப் பெறலாம்.
எல்லா வயதுக்காரர்களும் மிகவும் விரும்பிச் சாப்பிடும் பூக்கோஸில் அதற்கு ஏற்றவாறு பாஸ்பரஸ் சத்தும் போதுமான அளவில் அமைந்துள்ளது. இது மந்தப்புத்தியை அகற்றி மூளையைச் சுறுசுறுப்புடன் செயல்படத் தூண்டிக் கொண்டே இருக்கும்.
எனவே, காலிஃபிளவர் (சீசனின்போது) தினசரி நன்கு சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைப் புதுப்பித்துக்கொள்ள மறவாதீர்கள்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON