குழித்துறை வாவுபலி பொருட்காட்சி குமரி மாவட்டம்
பார்வையாளர்களை கவரும் கைவினை பொருட்கள், பல்வேறு கண்காட்சி அரங்குகள்
kuzhithurai vavubali porutkatchi
"ஆடி பட்டம் தேடி விதைக்கணும்" என்று ஒரு பழமொழி உண்டு. நெல் விவசாயம் செய்யஆடி மாதம் விதைத்தால் தான் தை மாதம் அறுவடை செய்யமுடியும். எனவே விவசாயிகளை பொறுத்தவரையில் ஆடி மாதம் என்பது பயிர்கள் நடவு செய்வதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

ஆடி மாதம் நடப்படும் செடி, மரம், கொடி எதுவாக இருந்தாலும்
நன்றாக வளரும், நல்ல பலனை தரும் என்பது எங்கள் ஊரில்
வழக்கில் இருக்கும் ஒரு ஐதீகம். இயற்கையாக எங்கள் ஊரில் ஆடி மாதம் மழை பொழியும்,
எனவே இந்த மழையும் எங்கள் ஊரில் மரம், செடி
இந்த மாதத்தில் நடுவதற்கு ஒரு
காரணியாக அமைகிறது. அதனால் பெரும்பாலும் எங்கள் ஊரில் ஆடி அமாவாசை அன்று எல்லோர் வீடுகளிலும் ஒரு மரமாவது நடுவார்கள். மரம் வைக்க இடம் இல்லாதவர்கள் ஒரு ரோஜா செடியாவது வீட்டின் முன்புறம் நட்டு வைப்பார்கள்.
காரணியாக அமைகிறது. அதனால் பெரும்பாலும் எங்கள் ஊரில் ஆடி அமாவாசை அன்று எல்லோர் வீடுகளிலும் ஒரு மரமாவது நடுவார்கள். மரம் வைக்க இடம் இல்லாதவர்கள் ஒரு ரோஜா செடியாவது வீட்டின் முன்புறம் நட்டு வைப்பார்கள்.
ஆடி மாதங்களில் எங்கள் ஊரில் அதிகமாக
மரக்கன்று மற்றும் பூச்செடி வியாபாரிகளை பார்க்கமுடியும். இதுமட்டுமல்லாது மரம், செடி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த
மாதத்தில் எங்கள் மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் நடைபெறும் "வாவுபலி
பொருட்காட்சி" ஒரு வாய்ப்பாக அமையும். இங்கு எல்லா விதமான மரக்கன்றுகளும்,
பூச்செடிகளும் கிடைக்கும்.
இந்த வாவுபலி பொருட்காட்சியானது 1926 ஆம் ஆண்டு துவங்கியிருக்கிறது. அந்தகாலத்தில்
இறந்த முன்னோர்களுக்கு பலிகர்மம் நடத்துவதற்கு ஆடிமாதம் இறுதி அமாவாசை அன்று
குழித்துறை ஆற்றின் இருபுறமும் மக்கள் கூடுவார்கள். இவ்வாறு கூடும் மக்களை கவரும்
விதத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த வாவுபலி பொருட்காட்சி.
அதனை தொடர்ந்து வருடம்தோறும்
இந்தபொருட்காட்சியானது நடத்தப்பட்டு வருகிறது. முதலில் மூன்று நாட்களாக
ஆரம்பிக்கபட்ட இந்த பொருட்காட்சியானது விதவிதமான கோழிகள், மற்றும் மரக்கன்றுகள், பூச்செடிகள்
என மக்களின் பார்வைக்கு வைத்தன. ஆனால் இப்போது மரம், செடி
மற்றும் மலர் கண்காட்சிகள் மட்டுமல்லாது கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என்று பட்டியல் நீண்டு 20
நாட்கள் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சிக்கு வந்து செல்பவர்கள்
வீட்டிற்கு திரும்பும் போது கண்டிப்பாக ஒரு மரக்கன்றாவது வாங்கி செல்வார்கள்.
மரம் நடுவதற்கு வசதியில்லாதவர்கள் ஒரு பூச்செடியாவது வாங்கி செல்வார்கள்.
எப்படியோ மரங்கள் அழிந்து வரும் இக்காலத்தில் இது போன்ற மரக்கன்றுகளின்
சந்தைகள், கண்காட்சி போன்றவைகள் அவசியமாகின்றன.
இங்கு வந்து ஆர்வமாக மரங்களை வாங்குபவர்களை பார்க்கும் போது நமக்கும்
அவற்றின் மீதான ஈர்ப்பு மனதில் வந்து விடுகிறது.
இதை பற்றிய செய்தியின் லிங்க் கீழே இணைத்துள்ளேன்
தகவல்களுக்கு மிக்க நன்றி. அருமையான பதிவு.
ReplyDeletewelcome
Delete