பத்மனாபபுரத்தில் இருந்து திற்பரப்பு செல்லும்
சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் 400 அடி உயரத்தில் குன்றின் மேல்
கட்டப்பட்டுள்ளது மருந்துக்கோட்டை. பத்மனாபபுரம் கோட்டை வடிவிலேயே
இந்தக்கோட்டையும் கட்டப்பட்டுள்ளது. கோட்டையின் மேற்பரப்பில் 5 கொத்தளங்களும், பெரிய கல்மண்டபம் ஒன்றும் உள்ளது.
கோட்டையின் மேற்பரப்பு இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. உதயகிரி கோட்டையில்
உருவாக்கப்பட்ட பீரங்கி படைத்தளத்திற்கு தேவையான வெடி மருந்துகளைத் தயாரிக்கவும்,
தேவையான வெடி மருந்துகளை பதுக்கி வைக்கவும் இந்தக் கோட்டை
பயன்படுத்தப்பட்டுள்ளது.
உதயகிரிக்கோட்டையில் இருந்து இந்த
மருந்துக்கோட்டைக்கு சுரங்கப்பாதைகள் இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர். மேலும் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு இந்த
மருந்துக்கோட்டையில்தான் சிகிச்சை நடக்குமாம். சிகிச்சையில்
இறந்து விட்ட வீரர்களை மைய கோட்டையில் கொண்டு சென்று போட்டுவிடுவார்களாம். அந்த
உடல்கள் பறவைகளுக்கு உணவாகுமாம். அரச குடும்பத்தினர்
இறந்தால் மட்டும் எரியூட்டுவார்களாம்
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின்
ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.