பயணம் – மாஹி (புதுச்சேரி) கேரளா, ( MAHE ), மாஹே....ஒரு
பார்வை
கேரளாவில் தலச்சேரி போனபோது பக்கத்துல
இருக்கிற மாஹே (புதுச்சேரி) யூனியன் பிரதேசத்திற்கும் போய்ட்டு வந்திடலாமே
அப்படின்னு அங்க போனோம்.அரபிக்கடலோரம் இருக்கிற ஒரு அழகிய குட்டி பிரதேசம்.எங்க
பார்த்தாலும் தண்ணீர் தண்ணீர்...கடல் மற்றும் ஆறுகளால் அப்புறம் நம்ம
கடைகளால்....மாஹிக்குள் நுழைந்ததுமே நம்மை வரவேற்பது நம்ம கடைகள் தான்.வித விதமாய்
மதுபானங்கள் வியக்கவைக்கின்றன.நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.(போதும்னு நினைக்கிறேன்..இல்லைன்னா
நம்ம பேவரைட் எச்சரிக்கை வாசகம் போடனும்....குடி குடியை கெடுக்கும்னு....)
மய்யாழிப்புழா எனப்படும் ஆறு கடலில்
கலக்கும் இடத்தில் இந்த குட்டி நகரம் அமைந்து இருக்கிறது.மொத்த பரப்பளவே 9 சதுர கிமீ தான்.நம்ம புதுச்சேரியோட முதல்வர்தான்
இங்கயும்.பிரெஞ்ச் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதி என்பதால் ஒரு சில பிரெஞ்ச்
கட்டிடங்களைக் காணலாம்.
மாஹியில் அதிகம் சுற்றிப்பார்க்க எந்த
ஒரு இடங்களும் இல்லை.ஒரு பார்க், ஒரு தேவாலயம் , ஒரே ஒரு போட் ஹவுஸ்... மஞ்சக்கல்
என்கிற இடத்தில் இருக்கிற போட் ஹவுஸ்.அதிலும் ஒரே ஒரு போட் மட்டும் தான்
இருக்கிறது..வாடிக்கையாளர் வருகைக்காக தவம் கிடக்கும் காட்சியினை காணலாம்.படகில்
கடலிலும், புழாவிலும் கொஞ்ச தூரம் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு
வந்தால் அவ்ளோதான்.
கடற்கரை ஓரம் என்பதால் பீச்
இருக்கிறது.ஆனால் அங்கு செல்ல வசதியில்லை.கேரளா அருகில் இருப்பதால் கேரள வாசம்
தான் வீசுகிறது.ப்ரெஞ்ச் ஆதிக்கத்திலான வீடுகள் என்பது மிகக்குறைவே.கடலில் ஆறு
கலக்கும் இடத்தில் ஒரு நீண்ட நடைப்பயண பாதை இருக்கிறது.ஆர்ப்பரிக்கும் கடலை
ரசித்துக்கொண்டே வாக்கிங் செல்ல ஏற்ற இடம்.அது தான் பொழுது போக்கும் இடமாக
இருக்கிறது. இந்த பார்க்கில் சுதந்திர தின போராட்டகாரர்களின் நினைவாக இரண்டு
கல்தூண்கள் இருக்கின்றன. சாயந்திர நேரம் அம்மணிகளுடன் கைகோர்த்து பவனி வர மிக
அம்சமாய் இருக்கிறது.பகல் பொழுதுகளில் பார்க் பென்ச்களில் படுத்துறங்கும்
சுகவாசிகளைக் காணலாம்.
மாஹி முழுவதும் பெரும்பான்மையான கடைகள்
நம்ம கடைகளாகவே இருப்பதால் நம்ம பங்காளிகள் அதிகம் இருக்கின்றனர்.கேரளாவை விட ரேட்
குறைவாக இருப்பதால் தலச்சேரி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மாஹி
பார்டருக்கு வந்து விடுகின்றனர்.விலையும் குறைவு...மனமும்
நிறைவு.....பங்காளிகளுக்கு ஏற்ற இடம்....
மாஹி / மாஹே எப்படி செல்வது....? கேரளா தலச்சேரி அருகில் இருக்கிறது.தலச்சேரியில்
இருந்து ஆட்டோ, பஸ் மூலம் மாஹி / மாஹே வந்தடையலாம்.
தலச்சேரி பேமஸ் - கல்லுமக்காய்
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.