Home
»
தமிழ் ஈழம்
» இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணசிங்கம் உசாலினி என அவரது பெற்றோர் அடையாளப்படுத்தி உள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஜந்தாம் ஆண்டின் நினைவு கூரல்
காலப்பகுதியில் வெளியிடப்பட்ட போர்க்குற்ற சாட்சியப் புகைப்படத்திலுள்ள மற்றைய
பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இறுதிப்போரில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட
இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணசிங்கம் உசாலினி என
அவரது பெற்றோர் அடையாளப்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பில் உசாலினியின் பெற்றோர்
தெரிவிக்கையில் ‘இறுதிப்போரின்
போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உசாலினி 2009 மே மாதம்
முற்பகுதியில் காணாமற் போயிருந்தார். மீள் குடியேற்றத்தின் பின்னர் எமது மகள்
காணாமற்போனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம்.
அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை
ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் நேற்று
ஊடகங்களில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியா என்ற போராளிக்கு அருகில் எமது
மகள் இருப்பதை நாம் அடையாளம் கண்டோம் என தெரிவித்துள்ளனர்.
07.01.1990 ஆம் ஆண்டு
பிறந்த உசாலினி மல்லாவி பாலைநகர் மகா வித்தியாலயத்தில் 2008 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.
எல்லோருடனும் அன்பாகவும் கலகலப்பாகவும் பழகுவார். அவரைப் பிடிக்காதவர்கள் எங்கள்
பாடசாலையிலேயே இல்லை என்று கூறலாம். படிப்பிலும் நல்ல கெட்டிக்காரியாக
விளங்கியவர். உசாலினியை செல்லமாக மச்சக்கன்னி என அழைப்போம். அவரின் இடது பக்க
கன்னத்தில் பெரிய மச்சம் இருப்பதே அதற்கு காரணம் ஆகும்.
இராணுவத்திடம் சரணடைந்த
இசைப்பிரியா உட்பட ஏராளமானவர்கள், கைகள்
பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் துன்புறுத்தப்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய
புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பிடத்தக்கது
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
About Author

Advertisement

Related Posts
- போராட்ட வரலாறுகளில் சில வீரமரணங்கள் ஆச்சரியத்தை கொடுப்பவை அப்படி ஒரு போராளி பாலன்29 Jun 20160
போராட்ட வரலாறுகளில் சில வீரமரணங்கள் வரலாற்று பக்கங்களில் ஆச்சரியத்தை கொடுப்பவை.அப்படி ஒரு பக்கத்...Read more »
- தமிழீழ போராட்ட தளபதி கேணல் ராதா - Tamil Eala Rada21 May 20140
யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாத...Read more »
- இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணசிங்கம் உசாலினி என அவரது பெற்றோர் அடையாளப்படுத்தி உள்ளனர்.21 May 20140
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஜந்தாம் ஆண்டின் நினைவு கூரல் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட போர்க்க...Read more »
- யாரங்கே, நீங்கள் சொன்ன அந்த ”பயங்கரவாதிகள்” இங்கே இருக்கிறார்கள் ”குழந்தைப்போராளிகள்21 May 20140
யாரங்கே, நீங்கள் சொன்ன அந்த ”பயங்கரவாதிகள்” இங்கே இருக்கிறார்கள் ”குழந்தைப்போராளிகள் , கு...Read more »
- இசைப்பிரியா உள்ளிட்டவர்கள் கொலைக்களத்தில் நிறுத்தி வைத்திருந்த பொழுது21 May 20140
ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே தினத்தில் இசைப்பிரியா உள்ளிட்டவர்கள் கொலைக்களத்தில் நிறுத்தி வை...Read more »
- இதுபோலவே, வரும் மே18ன் நிகழ்விற்கு நம்முடைய சொந்த ஊடகத்தினையே பயன்படுத்துவோம்.21 May 20140
2009க்குப் பின் இனப்படுகொலையை தடுக்க முடியாமல் போனதில் நமக்கான ஊடகமும் இல்லாதது ஒரு முக்கி...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.