Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள்!!!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
மிகவும் மோசமான அளவிற்கு மனிதனை அடிமைப்படுத்தும் பழக்கங்களில் ஒன்றாக சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. புகை பிடிப்பவர்கள் புகையிலை மற்ற...

மிகவும் மோசமான அளவிற்கு மனிதனை அடிமைப்படுத்தும் பழக்கங்களில் ஒன்றாக சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. புகை பிடிப்பவர்கள் புகையிலை மற்றும் நிக்கோடினுக்கு அடிமையாகாமல் இருப்பது மிகவும் கடினமான முயற்சியாக இருக்கும். டீன்-ஏஜ் பருவத்தில், நண்பர்களின் மூலம், புதுமையான ஒரு விஷயத்தை முயற்சி செய்வதற்காகவோ அல்லது மற்றவர்களின் ஸ்டைல் மற்றும் திறனை கண்டோ இந்த பழக்கம் அறிமுகமாவது வழக்கமாகும். இந்த புகைப்பழக்கத்திற்கு உங்களை இழுத்துச் செல்வது எந்த காரணமாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் நீங்கள் அதனை நிறுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள். புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுப்பது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் அந்த பழக்கத்தை நிறுத்துவதற்கு நீங்கள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். நிறைய மது-புகை பழக்க ஒழிப்பு மையங்கள் நிக்கோடின் மாத்திரைகள், இ-சிகரெட்கள், பேட்ச் போன்ற பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை நிறுத்த உதவுகின்றன. 

பல்வேறு மூலிகைகள் மற்றும் மூலிகை பொருட்களை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் சற்றே பிரபலமில்லாத வழிமுறை ஒன்றும் உள்ளது. முழுவதும் இயற்கையானதாகவும் மற்றும் பக்க விளைவுகள் இல்லாமலும் இருப்பதால், இந்த மூலிகை வைத்திய முறைகள் தற்போது வெகு வேகமாக பிரபலமாகி வருகின்றன. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த உங்களுடைய குடும்பத்தின் பேராதரவும் மற்றும் கவனச் சிதறல் இல்லாமலும் இருக்க வேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்திருந்து விடுபட முயலும் போது, நீங்கள் எந்த அளவிற்கு மற்றும் எவ்வளவு காலத்திற்கு அடிமையாகி உள்ளீர்களோ அந்த அளவைப் பொறுத்து இலேசான குமட்டல் முதல் கடுமையான சிக்கல்களும் ஏற்படும். புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த நீங்கள் மூலிகை வழிமுறையைத் தேர்ந்தெடுக்கும் போது, நிக்கோடினில் இருந்து விடுபடுவதற்காக கடுமையாக போராடக் கூடிய பல்வேறு மூலிகைகளை உங்களுக்கு தருவார்கள். ஒவ்வொரு அறிகுறிக்கும் ஏற்ற வகையிலான பல்வேறு மூலிமை மருந்துகளும் இதில் உள்ளன. இங்கே புகைப் பழக்கத்திலிருந்து விடுபட ஏற்ற சில பிரபலமான மூலிகை மருந்துகள் தரப்பட்டுள்ளன.


செயின்ட் ஜான்ஸ் வோர்ட் (St. John's wort) 
இது புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரபலமான மூலிகை மருந்துகளில் ஒன்றாகும். இது உடலை அமைதிப்படுத்தவும், ஓய்வெடுக்க வைக்கவும் செய்து, நிக்கோடினின் பிடியிலிருந்து விடுபட விரும்புபவர்களின், மன அழுத்தம் மற்றும் போராட்டத்தை குறைக்கவும் செய்யும்


லோபெலியா (Lobelia) 
இந்த மூலிகை நிக்கோடின் செய்யும் செயல்களைப் போன்றே அடிமையாக்காத வகையில் உங்களுடைய மூளையில் செய்யும் தன்மை கொண்டாதாகும். எனவே இது புகைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் மிகச்சிறந்த மூலிகைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் விற்கப்படும் புகைப் பழக்கத்தை நிறுத்தும் சில பொருட்களில் இந்த மூலிகையின் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன.


ப்ளூ வெர்வெய்ன் (Blue vervain) 
ப்ளூ வெர்வெய்ன் மூலிகையானது இயற்கை முறையில் அமைதிப்படுத்தும் காரணியாகச் செயல்பட்டு உங்களுடைய மன அழுத்தம், பயம், பதட்டம் மற்றும் போராட்டத்தை குறைக்கவும் உதவி செய்து உங்களை சற்றே ஓய்ந்திருக்க செய்யும். இந்த வகையில் நீங்கள் நிக்கோடின் பிடியிலிருந்து வெளிவரும் போது ஏற்படும் தடங்கல்களிலிருந்து உங்களை விடுபட வைத்து, உங்களுக்கு மீண்டும் சிகரெட் பிடிக்கும் எண்ணம் வராமல் தடுக்கும் வைக்கும்.


பெப்பர்மின்ட்/புதினா (Peppermint) 
நிக்கோடினில் இருந்து விடுபடும் போது ஏற்படக் கூடிய பக்க விளைவுகளாக குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை உள்ளன. இந்நேரங்களில் பெப்பர்மின்ட் குமட்டலை குறைத்து, ஓய்வெடுக்க தூண்டும் காரணியாக சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு மயக்கமூட்டவும் மற்றும் வலியை-குறைக்கவும் செய்யும் திறன் உள்ளது.


கொரியன் ஜின்செங் (Korean ginseng) 
உடலின் சக்தி அளவுகளை உயர்த்தவும் மற்றும் மன அழுத்தத்துடன் இணக்கமாக செயல்படச் செய்யவும் உதவும் சக்தி வாய்ந்த ஊக்கியாக கொரியன் ஜின்செங் செயல்படுகிறது. நீங்கள் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, உங்களுக்கு அடிக்கடி மன அழுத்தமும், மந்த நிலையும் ஏற்படும். ஜின்செங் பயன்படுத்துவதன் மூலம் இந்த புகை ஒழிப்பு அறிகுறிகளிலிருந்து விடுபட முடியும்.


மதர்வோர்ட் (Motherwort) 
இது அமைதிப்படுத்தும் திறன் கொண்ட மூலிகைகளில் ஒன்றாகும். இது பயத்தில் இருக்கும் போது அமைதியை தூண்டுகிறது. நீங்கள் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்து வருகையில், உங்களுக்கு அடிக்கடி பய உணர்வு தோன்றும். மதர்வோர்ட் மூலிகை இந்த பய உணர்வை போக்க உங்களுக்கு உதவுகிறது.


ப்ளாக் கோஹோஸ் (Black cohosh) 
பதட்டம் மற்றும் பயத்தை சரி செய்து, அமைதியை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் பிரபலமான மூலிகையாக இது உள்ளது. விடுபட்டு வரும் வேளைகளில் இவை மிகவும் சாதாரணமாக தென்படும் அறிகுறிகளாதலால், அவை உங்களை மீண்டும் புகை பிடிக்க வைக்கத் தூண்டுகின்றன. ப்ளாக் கோஹோஸ் மூலிகை உங்கைள நிக்கோடினில் இருந்து விடுபட உதவும் முதன்மையான மூலிகையாக உள்ளது.


ஸ்லிப்பரி எல்ம் (Slippery elm) 
புகைப் பழக்கத்தை நிறுத்துவதால் சில நேரங்களில் செரிமானக் கோளாறுகளும் மற்றும் அஜீரணத்தால் மிகவும் அதிகமாக வசதியின்மையும் தோன்றும். ஊட்டச்சத்துக்கள் மிகுந்து மற்றும் எளிதில் செரிமானமாக இந்த மூலிகை உதவுவதால், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடும் போது இது மிகவும் சிறந்த உணவாக உள்ளது.

நன்றி!!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top