வெங்காயத்தின்
காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள “அலைல்
புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின்
நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக
அமைகிறது.வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள்,
வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின்
தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ளகூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை
இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
“அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள்
வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர
நுரையீரல் சுத்தமாகும்.”
குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை
கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு
வகை என்சைம் கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும்
உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது.
விஷத்தையும் முறித்து விடுகிறது.
யூரிக் அமிலம் அதிகமாக
சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால்
அந்த கற்கள் கரைந்துவிடும்.
முதுமையில் வரும்
மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு
வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி
உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
செலனியச் சத்து
இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம்,
களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி
வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும்.
தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக
பயன்படுத்தலாம்.
சீதோஷ்ண நிலை மாறும்
போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு
எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து
சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
புற்றுநோயைத் தடுக்கும்
மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல்
சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
நாலைந்து வெங்காயத்தை
தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
வெங்காயச் சாறு சில
வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து
வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து
பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.