பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய
ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன.
இதில் அடங்கியுள்ள ஏராளமான
தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை.
இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில்
உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல்
தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.
வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய்
கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா
கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள
கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை
தடுக்கின்றது.
ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு
சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. எனவே சருமத்தில் ஏற்படும்
சுருக்கங்களை தடுக்கும். மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது.
அதாவது இதனை சாப்பிட்டால், சருமத்தை பாதுக்காக்கும் வகையில் ஒரு
படலத்தை உருவாக்கும். ஆகவே 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்துக் கொண்டு, அதில்
சிறிது தயிர் ஊற்றி, கலந்து, பின் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்
கழுவ வேண்டும். வேண்டுமெனில் இதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்தும் தடவலாம்.
நன்றி!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON